செய்தி: சுகாதார சுற்றுச்சூழலுடன் - வரும் கல்வியாண்டில் காயல்பட்டினத்தில் CBSE பாடத்திட்ட அடிப்படையில் புதிய பள்ளி துவக்கம்! டிச.12 அன்று கட்டிடப் பணிகள் துவக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி, posted byNIZAR (KAYALPATNAM)[11 December 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 24456
காயல் மக்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி என்று சொன்னால் அது மிகையில்லை. இத இததான் நம் மக்கள் வெகுகாலமாக எதிபார்த்து இருக்கிறார்கள். நம் ஊரில் எத்தனை மெட்ரிக் பள்ளிகள் இருந்தாலும் கமலாவதி என்ற CBSE ஸ்கூலுக்கு நிகரான கல்வி மற்றும் ஆங்கில அடிப்படை அறிவுகளை மாணவர்களுக்கு வழங்க முடியாதது நிதர்சன உண்மை. நம் ஊரு மெட்ரிக் மாணவர்களுக்கும் கமலாவதி மாணவர்களுக்கும் இடையே நிறைந்த வேறுபாடுகளை காணமுடியும், பொதுவாக அங்கு படிக்கிற மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல், புரியும் தன்மை தானாகவே வருகிறது.காரணம் தகுதியான ஆசிரியர்களை கொண்டதால் நல்ல ஆங்கில சுற்று சூழலை பெறுகிறது.
இந்த மாயை காரணத்தில் தான் மாசு விதி முறைகளை பேணாமல் மக்களுக்கு அமிலகளிவுகளை கடலிலும்,காற்றிலும்,கலந்து காயல் நகரை துவம்சம் செய்யும் இந்த ஆலையின் பள்ளியில் காயலின் அழகிய குழந்தைகள் நூற்றுகணக்கில் படிக்கிறார்கள்,இப்பொழுது நம் ஊரில் அமைய இருக்கம் CBSE ஸ்கூல் இந்த பள்ளிக்கு மாற்று வழியாக இருக்கும் என நம்புகிறேன்.அழகிய கட்டிட வசதியுடன் அமைய இருக்கும் இந்த பள்ளிக்கூடம் நல்ல ஆங்கில சுற்று சூழலை மாணவர்களுக்கு வழங்க ஆரம்பத்தில் இருந்தே அதற்கான முயற்சியை ஏற்படுத்தவேண்டும்.
ஆசிரியர் சேர்க்கையில் மிகுந்த கவனம் செலுத்துவதின் மூலமே ஸ்கூலின் தரத்தை உயர்த்தமுடியும்,குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்களை அமர்த்தி கடமைக்கு ஸ்கூல் நடத்தும் பாணியில் இல்லாமல்,மிக தரம் வாய்ந்த ஆசிரியர்கள்,அணைத்து வசதிகளையும் ஒன்றிணைந்த வெளி இடங்களை காயல் மாணவர்கள் நினைத்தும் பார்க்காத அசத்தலான பள்ளிக்கூடமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்களை அதன் நிர்வாகிகளுக்கு தெர்வித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross