செய்தி: DCW ஆலை விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் நடவடிக்கை! காயலர்கள் முன்னிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தூத்துக்குடி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரை. posted byNIZAR (KAYALPATNAM)[12 December 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 24479
தூத்துக்குடி மாசுகட்டுபாடு வாரியம் DCW தொழிற்சாலையை ஆய்வு செய்து LLMENITE என்ற பிரிவை மூட சொல்லி தலைமைக்கு பரிந்துரை செய்தால் அதை பற்றி பேசாமல் அதனால் ஏற்படும் கழிவுகளை கொண்டு தயாரிக்கும் இன்னொரு தொழிற்சாலை பற்றி இந்த பாலாஜி சார் பேசுகிறார் என்றால் எந்த அளவுக்கு DCW நிர்வாகத்தோடு எவ்வளவு இதமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.
2006 லிருந்து அதாவது கிட்டத்தட்ட ஆறுவருடம் DCW முயற்சி செய்கிறது எனவும் அதில் பல சிக்கல் இருப்பதாக இவரே வாக்குமூலம் தருகிறார் என்றால் LLMNITE பிரிவை மூட போறதும் இல்லை, அந்த கழிவுகளை கொண்டு வேறொரு பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை வரபோரதுமில்லை என்பது பாலாஜி சாரின் கருத்தில் தெள்ள தெளிவாகிறது.
தலைமை வாரிய மேலதிகாரி இப்படி பேசுகிறார் என்றால் இது கலந்துகொண்ட காயல் சகோதரர்களுக்கும், மற்ற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக அரசு அதிகாரிகள் அரசிடம் ஊதியம் பெற்றாலும் தனியார் தொளிட்சாளைகளின் அபிமானிகளாகத்தான் இருப்பார்கள், அதனால் ஆலைகளை பற்றி என்ன குறை சொன்னாலும் இவர்களே ஆலையின் அங்கத்தினராக மாறி ஆலைக்கு சாதகமாக வருடிகொடுப்பது வாடிக்கைதான்.
எனவே அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி தெளித்து விடாமல், பெரியோர்களின் விலைமதிக்க முடியாத ஆலோசனைகளை கனிவாக பெற்று துவண்டுவிடமால், நிதானத்தை கடைபிடித்து, சமயோசித புத்தியுடன் பொறுமையை கடைபிடித்து வெற்றியை இலக்காக்குவது மட்டுமே இலட்சியம் என நடைபோடுவோம், இறைவன் நம் முயற்சிகளை வெற்றியாக்குவான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross