கொக்கரித்த போலி அங்கத்தினர் - அமைப்பினர் - பேரவையினர் என்ன சொல்லுகிறீர்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[16 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24514
ஒரு கட்சியை சார்ந்த தலைவர் அக்கட்சியின் அடையாள சின்னத்தோடு கட்சி ஆதரவாளர்கள் 1200 பேருக்கும் மேல் தாரை தப்பட்டையுடன் நடந்து வரும் நடை பயணத்தின் போது அவ்வழியில் வாவு வஜிஹா வனிதயர் கல்லூரியின் நிர்வாகம் வயதுக்கு வந்த மாணவிகளை சாலையோரத்தில் வரிசைபடுத்தி வைத்து வரேவேற்றது தவறு...! மேலும் கண்டிக்க தக்கது..! அரசியல் கட்சிக்கும் மாணவிகளுக்கும் என்ன சம்பந்தம்...? கல்லூரி நிர்வாகத்திற்கு வேண்டுமானால் கட்சி தலைவர்கள் தேவைபடலாம்..!
உங்களையும், உங்கள் கல்லூரியையும் கட்சி தலைவர் வாழ்த்தி பேச வேண்டும் என்பதற்காக - உங்கள் சொந்த விளம்பரத்திற்காக இதில் ஏன் மாணவிகளை வீதிக்கு வரும் படி அழைத்தீர்கள்...?
இது தான் நமது சமுதாய கல்லூரியின் லட்சணமோ...?
கல்லூரி மாணவிகளை சாலையோரத்தில் நிறுத்தி இதில் ஈடுபடுத்த செய்தது சமுதாய என்று சொல்லிகொள்ளும் கல்லூரிக்கு உகந்ததல்ல....!
இந்த செயலால் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மீது மிகவும் அதிருப்தி அளிக்கிறது... அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடமும், தமிழக கல்வி அமைச்சரிடமும் தமிழக முதல்வரிடமும் முறையிடலாம் என யோசிக்கிறார்கள்...!
கல்லூரி நிர்வாகம் இது சம்பந்தமாக எந்த சப்ப காரணங்கள் கூறினாலும்...! கல்லூரி நிர்வாகம் செய்தது தவறு... தவறு..தான்...! நடுநிலை வாதிகளே..! நீங்கள் சொல்லுங்கள்...! கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டது தவறா...? சரியா...?
உங்கள் கல்லூரி விளம்பரத்திற்காக நம் சமுதாய (கோச அணியும்) மாணவிகளையும் மற்றும் மாற்று மத சகோதர சமுதாய மாணவிகளையும் வீடியோ - புகைப்படம் மற்றும் பல ஆண்கள் பார்க்கும் அளவுக்கு வீதிக்கு அழைத்து விளம்பரம் தேடியது சரிதானா...?
சமுதாய உரிமைக்ககாகவும், மார்க்க நிகழ்ச்சிக்காகவும், மார்க்கம் அளித்திருக்கும் உரிமையோடு, மார்க்க நெறியோடு ஒழுக்கத்தோடு சில இஸ்லாமிய இயக்கங்கள் பெண்களை வீதிக்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தும்போது கொக்கரித்த போலி அங்கத்தினர் - அமைப்பினர் - பேரவையினர் என்ன சொல்லுகிறீர்கள்...
இதோடு தாங்கள் செய்தது தவறு என உணர்ந்த கொள்ளுங்கள்...? இல்லையெனில் மாணவிகளின் பெற்றோர்கள் கல்லூரியின் நிர்வக்திர்க்கு தமிழக அரசின் கவனத்தின் மூலம் உணர்த்துவார்கள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross