நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[17 December 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24533
காரசாரமான கருத்துப் பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு நல்ல விஷயத்துக்காக கட்சி வேறுபாடுகள் பாராமல் வரவேற்பது குற்றமல்ல! நம் சமுதாய மாணவியர்களும் கண்ணியமான முறையில் முகம் மறைத்து தான் நிற்கின்றனர். விழிப்புணர்வு இளைய சமுதாயத்தை எட்ட வேண்டும் எனும் நோக்கில் வாவு வஜிஹா வனிதயர்க் கல்லூரி பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளரங்கத்தில் வைத்து நடத்தி வருகின்றனர். இந்த வரவேற்புக்கு கல்லூரி நிவாகம் நம் மாணவியரைக் கட்டாயப்படுத்தியதா? அல்லது விருப்பமுள்ளவர் வரலாம் என அழைத்ததா? எனத் தெரிய வில்லை!
மார்க்கம் காயல்பட்டணத்துக்கு மட்டும் சொந்தமல்ல. நமக்கென ஓர் கலாச்சாரம் உள்ளது என்பதையும் நான் மறுக்கவில்லை! இதுவே பிற மாநிலங்களிலோ அல்லது பிற நாடுகளிலோ நடந்திருந்தால் நாம் ஆஹா..ஓகோ வென பாராட்டியிருப்போம். நடந்தது நடந்து விட்டது. இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கல்லூரி நிவாகம் கவனமாக இருப்பது நல்லது.
ஒரு வேளை அக் கட்சியைச் சார்ந்த உள்ளூர் பிரமுகர் ஒருவர் தன் தலைவனிடம் நற் பெயர் வாங்குவதற்காக கல்லூரியின் நிர்வாகிகளோடு தனக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தியிருக்கக் கூடுமோ? எனும் ஐயப்பாடு மனதில் தோன்றுகின்றது. அல்லாஹ் தான் அனைத்தும் அறிந்தவன்!
“தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது...தவறு செய்தவர் வருந்தியாகணும்...தப்பு செய்தவர் திருந்தியாகணும்...”
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross