செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதற்கு முன்னர் தலைவி அவர்களை பலமுறை வாடி, போடி
என்று ஒருமையில் கத்திய ஒரு பெண் உறுப்பினர், இந்தக்
கூட்டத்தில், போஸ் கொடுக்கத்தானே வந்திருக்கின்றாய்
என்று கூறுவதை தட்டிக் கேட்க மனசாட்சி இல்லாதவர்கள் ,
தலைவி அவர்கள் "இதுவே உங்களது மனைவியைக் குறித்து
யாரேனும் பேசினால் பார்த்துக் கொண்டு இருப்பீர்களா?" என்று
நியாயம் கேட்கும் போது, உறுப்பினர் பொங்கியெழுந்து அடாவடி
தனம் செய்வதை பார்க்கும்போது, இவர்கள் மனசாட்சியை
விற்றவர்கள் என்பது தெளிவாகிறது.
தனது மனைவியைக் குறித்து பேசப்பட்டதும், பிளிறுகின்ற
உறுப்பினர் அவர்கள், தலைவி அவர்களும் இன்னொருவரின் மனைவி என்பதை மறந்தது ஏனோ?
அது மட்டுமல்லாமல் தலைவி அவர்களை மிரட்டும் தொனியில் ஒருமையில் பேசுவதோடு, அசிங்கமாகப் பேசி விடுவேன் என்றும் கூறுகின்றார்.
சகோதரர் அவர்களே! நீங்கள் கோஷா பெண்களை
குறித்து அத்து மீறி பேசியபோதே இந்த மக்கள் பொங்கி எழுந்து
இருந்தால், இந்நேரம் இந்த அளவிற்கு நீங்கள் பேசியிருக்க
மாட்டீர்கள்.
ஒரு விஷயத்தை மாத்திரம் இங்கே மிகத் தெளிவாக
பதிவு செய்ய விரும்புகிறோம். ஜனநாயக ரீதியாக,களத்தில்
நின்று அனைத்து சமூக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு,
தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவரை, பெண்தானே!
மிரட்டிப் பார்த்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது
கனவிலும் நடக்காது.
சாலிஹு அவர்களே! அரசியல் சட்டம் உங்களுக்குத் தந்துள்ள
ஊடக உரிமையை இன்னும் தைரியமாக நீங்கள் முன்னெடுத்துச்
செல்லுங்கள். கண்ணியக் குறைவாக நடக்கின்ற சாமி அவர்கள்,
மற்றும் அவரது சகாக்கள், செய்த மற்றும் செய்யும், தவறுகளுக்காக வருந்தும் நாள் விரைவில் வரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross