செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...காடே மேல் posted byசாளை பஷீர் (மண்ணடி,சென்னை)[19 December 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 24585
நகர் மன்றத்தின் அவசர கூட்டத்தின் அசை படத்தை காணும் போது இவர்கள் காட்டிலும் ஊர்த்தெருவிலும் திரியும் விலங்குகளுக்கு உறுதியாக நல்ல பெயர் வாங்கி கொடுத்து விடுவார்கள் என்றே தோன்றியது.
அசை படக்காட்சி முழுக்க உறுப்பினர் சுகுவின் உடல் மொழியும் பேச்சும் மிகவும் இழிந்ததாக இருந்தது. நகர் மன்றத்தலைவி ஒரு பெண் என்பதை மறந்து படு கேவலமான சொற்களால் அடிப்பதை போல் கையை நீட்டியும் , மேசையை தட்டியும் காடைத்தனமாக நடக்கின்றார்.
உறுப்பினர் சுகுவிற்கு இணையாக உறுப்பினர் பி.எம்.எஸ். சாரா உம்மாள் தரக்குறைவான சொற்களை ஆவேசம் பொங்க பேசுகின்றார். உறுப்பினர் சுகுவிற்கு பக்க வாத்தியம் வாசித்தவர்களில் உறுப்பினர்கள் சாமி , மும்பை மெய்தீன் , பதுருல் ஹக் , லுக்மான் ,பெத்தா தாய் ஆகியோரும் அடக்கம்.
பி,எம். ஆபிதா ஷேக் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர் மன்ற உறுப்பினர் என்பதையும் தாண்டி அவர் ஒழுக்க மிக்க பெண். கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவர். மனைவி, தாய் என்ற பொறுப்புகளை சுமந்த இல்லத்தரசி. கல்வி கண் திறக்கும் ஆசிரியை. எல்லாவற்றிற்கும் மேலாக நமதூர் மக்களின் உடன் பிறவா சகோதரி.
உறுப்பினர் சுகு தலைமையில் ரகளை செய்யும் நகர் மன்ற உறுப்பினர்களே ! எங்கள் வரிப்பணத்தை வீணடிக்கவும் ஆபாசமான வசவுகளை பேசவும் தலை நகரத்து அரசர் சொல்படி ஆடவும் நகர் மன்றம் ஒன்றும் மீன் சந்தையும் இல்லை அல்லது உங்கள் பாட்டன் வழி சொத்தும் இல்லை.
உங்களை மக்களாகிய நாங்கள்தான் தேர்ந்தெடுத்து பணி செய்வதற்காக அனுப்பினோமே தவிர ஆபாச கூச்சலும் ரகளையும் செய்வதற்கு அல்ல.
ஊர் மக்கள் அனைவரும்தான் அதன் உண்மையான எஜமானர்கள். ஒரு பெண்ணிடம் மோதும் அந்த புற நானூற்று வீரக்காட்சிகளை பொது மக்களிடம் கொண்டு சென்றால்தான் சரி. ஜன நாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross