நீயா நானா posted byS.A.Muhammad Ali Velli (Dubai)[19 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24589
தலைவி உறுப்பினர்களை குற்றம் சாட்டுவதும் மீண்டும் உறுப்பினர்கள் தலைவியை குற்றம் சாட்டுவதும் காயல் மக்கள் அனைவரையும் பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உங்களை தேர்ந்தடுத்த மக்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டார்கள்.
உலகின் அத்தனை பிரச்னைகளுக்கும் அறிவார்ந்த பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண முடியும்.
ஒத்த கருத்தினை உருவாக்குதலும், பாகுபாடின்றி செயலாற்றுதலும், நிதானந்தவறாதிருத்தலும் ஒரு தலைவருக்கு அவசியமான பண்பு. தலைவியும் தன்னிடம் உள்ள குறைகளை திருத்த முன் வர வேண்டும்.
இறைவனுக்கும் அவனது தூதருக்கும் உங்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டவருக்கும் கீழ்ப்படியுமாறு அல் குர்ஆன் கூறுகிறது. ஆனால் நமது 13 உறுப்பினர்களுக்கும் அதிகாரி யார் என்பதுதான் நமக்கு புரியவில்லை.
உங்களுக்குள் உள்ள நீயா நானா போட்டியில் உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து நமது ஊரின் கண்ணியத்தை காற்றில் பறக்க விடும் நீங்கள் இறைவனிடத்தில் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
"Oh you who believe, obey God, and obey the messenger and those charged with authority among you " Al Quran
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross