செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சகிக்க முடிய வில்லை. posted bySalai. Mohamed Mohideen (USA)[19 December 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24616
ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுத கதையாக 'கோஷா புகழ்' அண்ணன் பண்ணும் அட்டூழியம் கொஞ்சம் நஞ்சம் இல்லை போல தெரிகின்றது. தலைவியை ஒருமையிலும் மரியாதை குறைவாகவும், மீடியா காரர்களையும் ஆணையரையும் நகராட்சி அலுவலர்களையும் ஏதோ அதிகாரத் தொனியில் மிரட்டுகிறார் வரம்பு மீறுகின்றார்.
பொது இடங்களில் மற்றவர்களின் லட்சனைத்தை பற்றி பேசுவதற்கு முன் தன் லட்சனைத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. ஏனென்றால் உங்களை பற்றியும் தெரியும் எம்குலப் பெண்மணிகளை பற்றியும் எங்களுக்கு தெரியும். இவர்களுக்கு இந்த தைரியத்தை தந்தது யார்?? "கோசா புகழ்" பாடிய அன்றைக்கே அடக்காமல் விட்டதுதான் காரணம் ??
காசு புரளும் DCW விசயத்துக்கெல்லாம் நல்லவர் வல்லவர் போல மூக்கை நுழைக்கும் மாண்புமிகு அண்ணன் நகராட்சி துணைத்தலைவர் கூட இதட்கெல்லாம் ஆதரவாக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக தனக்கு பிடிக்காத தலைவிக்குதானே நடக்குது என்று அமைதியா இருந்தால் நாளைக்கு அது நமக்கே நடக்கும் என்பதனை மறந்து விடாதீர்கள். கடந்த கால படிப்பினைகளை நினைவில் கொண்டு.... உறுப்பினர்களே பொதுமக்களே இவர்களை போன்றோரை (நன்கு அறிந்திருந்தும்) வளர விட்டு விடாதீர்கள்.
போதா குறைக்கு பர்தா அணிந்துள்ள ஒரு சகோதரியின் வார்த்தைகள் முக பாவனைகள் நடவடிக்கைகள் அன்று முதல் இன்று வரை சகிக்க முடியவில்லை. சில நேரங்களில் நமக்கே ஒரு சந்தேகம் வருகின்றது... நமதூர் பெண்மணியா இப்படியென்று. எல்லா சகோதரிகளும் மிகக் கண்ணியமாகவும் அமைதியாகவும் தங்கள் தரப்பு வாதத்தை குறைகளை வைக்கின்றனர். அநேகமாக நம் பெண்கள் இது போன்ற வீடியோவை பார்க்காமல் இருப்பது நலமென்று நினைக்கின்றேன்.
ஒவ்வொரு கூட்டத்திலும் காமடிக்கு பஞ்சமே இல்லை. கேமாரவுக்கு முன் வந்து விகாரமாக தனது முகத்தை காட்டி சிறு பிள்ளைகளை பயமுறுத்தும் பூச்சாண்டியின் செயல் போல நம் மூத்த சகோதரரின் நடவடிக்கை உள்ளது. இவரின் செயலை பார்த்து சிரிப்பதா அல்லது அறியாமையை எண்ணி வருத்தபடுவதா என்றே தெரியவில்லை.
ஒருவேளை நகரமன்ற தலைவர் ஒரு ஆணாக இருந்திருந்தால் கூட... இவர்கள் பண்ணும் ரவுடிதனத்துக்கு இணையான பேச்சுக்கள் செயல்ககள் மிரட்டல்களுக்கு பயந்திருப்பார்கள். எப்படித்தான் நம் தலைவி இவர்களிடம் தாக்கு பிடிக்கின்றாரோ. நகர்மன்ற கூட்டத்திலே அதுவும் பார்வையாளர்கள் பொது மக்கள் பார்வைக்கான விடியோவிலே இப்படி என்றால்... மறைமுகமாக தனிக் கூட்டங்களில் எல்லாம் எப்படித்தான் நடப்பார்களோ. ரப்புவுக்கே வெளிச்சம் !!
இன்னும் எத்தனை காலம்தான் இந்த அட்டூழியங்களை கொடுமைகளை வேடிக்கை பார்க்கப் போகின்றோம்... கண்டும் காணாதிருக்க போகின்றோம். கண்ணிய மிக்க காயலில் நம் சகோதரிக்கு இது நடக்கின்றது என்று மனதில் வைத்து கொள்ளுங்கள். ஐந்து வருடம் கழித்து பொங்கியெழுந்து ஒரு பயனும் இல்லை.
உச்சக்கட்ட தொனியில் இன்று வரை இவைகள் தொடர்வதற்க்கு பொதுமக்களாகிய நாம் அனைவரும் கூட ஒரு காரணம். இதே இது தனது சகோதரிக்கு நடக்கின்றதென்று நாம் நினைத்தால் இப்படித்தான் அமைதி காப்போமா ?
பொதுமக்கள் சமுதாய அமைப்புகள் தன் சாட்டையை சுழற்றாதவரை இவர்கள் அடங்குவது கடினம். இவர்களுக்கு மிகப்பெரிய " ஆப்பு " முதல்வரிடமிருந்து மற்றும் பொது மக்களிடமிருந்து வரும் வரை இவைகள் தொடரும் என்பது மட்டும் நிச்சயம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross