வருந்துகின்றேன். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[20 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24637
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். என் பள்ளித் தோழன் அப்துல்லாஹ்வின் தந்தை கண்ணியம் மிக்க ஆலிம் பெருந்தகை, மஹ்ழராவின் முதுகெலும்பாய் இருந்து நூற்றுக்கணக்கான மணவர்களை ஆலிம்களாக உருவாக்கிய மகத்தான மனிதர். கனீரெனும் குரலில் ஹதீஸ்களை சொல்லும் பேச்சாற்றல் மிக்க பெருந்தகை கலந்தர் மஸ்த்தான் ஆலிம் அவர்களின் மரணச் செய்தி பார்த்து ஒருக் கனம் ஆடிப்போய் விட்டேன்.
பள்ளி படிப்பு காலத்தில் அவர்கள் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து என் நண்பன் அப்துல்லாஹ்வோடு நட்புறவாடிய நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன்.
கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டோடு தானும் வாழ்ந்து தம் குடும்பத்தையும் வழி நடத்திய ஒரு பொறுப்புள்ள தந்தை அவர். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை வழங்கியருள வேண்டுகின்றேன். குடும்பத்தார் மற்றும் மாணவர்கள் சபூர் செய்யும் படியும் பனிவோடு வேண்டுகின்றேன். வஸ்ஸலாம். -ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross