வீடியோ பார்த்த பிறகு மனதில் பட்டவை! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[20 December 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24659
அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் பதிந்துள்ள முன் கருத்துக்களையும் எந்த மாற்றங்களும் இல்லாமல் அமோதித்து வீடியோ பார்த்த பிறகு மனதில் பட்டவைகள்.
1. 3 வது வார்ட் பெண் உறுப்பினர் ஏன் அனைத்து நிகல்வுகளிலும் இஸ்லாமிய கலாச்சாரத்தை புறக்கணித்தும் தெருச்சண்டை போட்டுக்கொண்டும் மிக அசிங்கமாக தொடர்ச்சியா கூட்டம் முதலாவது முதல் இன்றுவரை அப்படியே தன்னை திருத்தாமல் நடந்து வருகிறார்? இவரை தேர்ந்தெடுத்து சிபாரிசு செய்த ஜமாஅத் ஏன் இன்னும் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? இவரின் கணவர் கூட ஏன் கட்டுபடுத்தவில்லை.
இவர் மக்கள் பிரச்சனைகளை பேசட்டும் ஆனால் அதை நாகரிகமாக பொறுமையுடன் கோபத்தை கூட நமது கலாச்சாரத்திற்கு உட்பட்டு வெளிபடுத்தட்டும் ஒன்றும் தவிறில்லை.அன்பான சகோதரியே தங்கள் மீது மரியாதைக்கொண்டு தான் பதிவு செய்கிறேன். தங்களை போன்ற பேச்சாற்றல் மிகுந்த உறுப்பினர் தேவை தான். தங்களின் பேச்சு முறைகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
2. நகர்மன்ற தலைவி அவர்களே!
தாங்கள் வகிக்கும் பொறுப்பு அதிக மன அழுத்தம் மற்றும் கோபம் வரவழைக்கும் பொறுப்பு. நீங்கள் முழுமையான தகுதி எப்போது பெறுவீர்கள் என்றால் தங்களின் கோபத்தினை முழுக் கட்டுபாட்டிற்கு கொண்டுவரும்போதுதான். இது இலகு கிடையாது. எங்களை போன்றவர்கள் இலகுவாக கருத்தை பதிவு செய்துவிடலாம். ஆனால் நேரடியாக எதிர்கொள்வது ஓர் கடினமான விசியம்தான். இருந்தாலும் தாங்கள் சபையில் உள்ளவர்களை தவிர்த்து வெளியில் உள்ள எவரையும் குறித்து பேசுவது நல்லதல்ல. அதாவது அடுத்தவரின் மனைவி பற்றி. அனைவருக்கும் தெரியும் நகர்மன்றம் என்றால் மக்களுக்காக நடக்கும் மன்றம் என்று. இதில் அவசரப்பட்டு எனது வீட்டு சொந்த பிரச்சனையா என்று வினவவும் அதற்க்கு உறுபினர் நான் என்ன உன் வேலைகாரனா என்று வாதாடுவதும் இப்படியாக நகர்மன்றம் திசை மாறிப்போக தங்களின் முன்கோபமும் ஒர்காரனமாக அமைந்து விடுகிறது...
கமிசனர் பொறுப்பில் உள்ள மினிட் புத்தகம் வெளியே சென்றால் அவர்மேல்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானம் இயற்ற வேண்டுமே தவிர வீணான விவாதங்கள் அவசியமில்லை.
3. அன்பான உரிபினர்கலே!
என்னை போன்ற நடு நிலமைவாதிகள் இது போன்ற வீடியோ பதிவு கண்டபிறகுதான் நிலைமைகளை உணரமுடிகிறது. தங்களின் பிடிவாதமான மறுப்பு வெறுக்கத்தக்கது.
தலைவி அவர்கள் கூறும் கருத்தாகிய உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட அஜெண்டாகளில் எது சாத்தியமோ அதைதான் எடுக்க முடியும் என்று தன்னிச்சையாக கூறுவது ஏற்புடையது அல்ல! இருப்பினும் இதற்க்கு காரணம் தங்களின் தொடர் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கோஸ்ட்டி சேர்த்து மக்கள்னலனில் அக்கறை இல்லாத காரணங்களால் தாங்கள் பெருபான்மையாக இருந்தாலும் தங்களின் மோசமான மக்கள்களுக்கு சாதகமான போக்கில் இல்லாத காரணத்தால் பெருபான்மை என்ற நியாமான விசியத்தை தலைவி அவர்களால் கடைபிடிக்க இயலாத தர்மசங்கடத்தை திணிக்கிறீர்கள் என்பது மக்களாகிய எங்களால் நன்கு உணரமுடிகிறது!
உங்கள் கூற்றுப்படி பார்த்தால் திரு சுகு போன்றவர்கள் கோசா பெண்களையும் நமது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு மாற்றமாக அல்லது மக்களுக்கு மிக பாதிக்க கூடிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அது மெஜாரிட்டி என்ற விதத்தில் தங்களின் சரியான நீதமான நேர்மையான செயல்கள் இல்லாததால் [கோசா பெண்களை பற்றி பேசியபோது மொவ்னம், DCW விவாகாரத்தில் மக்களுடன் சேராதவை இன்னும் பல.....] தலைவியின் தன்னிச்சை முடிகள் எடுக்க தாங்களே காரணம்....சிந்தீப்பீர்! செயல் படுவீர்......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross