செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யா அல்லாஹ் எங்கள் ஊரை இந்த எமபாதகர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக! posted byமுஹம்மது ஆதம் சுதான் (YANBU)[20 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24680
வீடியோ காட்சி சரிவர வராமல் திடீரென்று ஒரு காட்சியுடன் ஆரம்பித்தது, அக்காட்சியை பார்த்து அரண்டு விட்டேன். ஏதோ பூதம் வந்து கேமரா முன் பேசுவதுபோல் இருந்தது. அட இது தமிழ் பெசுகிறேதே என்று என்னை நான் சுதாரித்து கொண்டேன்!
நம் உயரினும் மேலான புனித இஸ்லாம் மார்க்கத்தின் கலாசாரத்தை கேலி செய்தவரை தட்டிக்கேட்ட சகோதரர்களுக்கு கிடைத்த பட்டம், சமூக நல்லிணக்கத்தை சீர்கெடுக்கிறார்கள் என்பதே!
என் திசையிலிருந்தும் ஈனத்தமான விஷ வார்தைகள் அடங்கிய அம்புகள் தலைவியை துளைக்க துடிக்கிறது.
எலும்பு துண்டுகளுக்கு ஏங்கும், ஈனத்தனமான வாழ்வை வாழும் அசிங்கமான அம்புகளை எய்த எஜமானர்கள் இலைமறை காயாக எங்கோ இருந்து கொண்டு எக்காலச்சிரிப்பு கலந்த இறுமாப்புடன் இயக்குவதை எவருக்கும் தெரியாது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்!
எல்லாவற்றையும் படைத்த இறைவன் "இன்ச்" பை "இன்ச்" ஆக பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்!
நம் ஒட்டுமொத மார்க்கத்தின் அடையாளமான "கோஷா" முறையை விமர்சித்தவரை வெகுவாக பாராட்டி,
எதிரிக்கி எதரி எனக்கு நண்பனே, அவன் நம் மார்க்கத்தை எந்த சீர்கெட்ட வார்த்தையால் விமர்சித்தாலும்
சிவப்பு கம்பள விரிப்புடன் தான் வரவேற்ப்போம்!
இது எங்கள் ராஜாங்கத்தின் நிரந்தர நிலைமை என்ற ஒரு நிழல் அரசாங்கத்தின் அரசர் கொடுக்கும் தைரியத்தின் திமிரோடுதான், தலைவியை பார்த்து "வவுந்து விடுவேன்" என்ற வார்த்தையை மட்டுமென்ன அதை செயலில் காட்டினாலும் சிந்தை குளிர்ச்சியோடு கொண்டாடும் குள்ளநரிக் கூட்டம் இருக்கும் வரை நம் நகராட்சியையும், நம் மக்களையும் மேலோனாம் முதல்வன்தான் காப்பாற்ற வேண்டும்!
யா அல்லாஹ் எங்கள் ஊரை இந்த எமபாதகர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக என்று நாம் இறைஞ்சுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
அவன் நினைத்தால் அரை நொடியில்........ அடுத்த வார்த்தையை எழுத என் கலமே கலங்குகிறது!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
ஊரைகாப்பற்ற உத்தமர்களின் உதவியை நாடும்,
முஹம்மது ஆதம் சுதான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross