செய்தி: டிச.14 - காயல்பட்டினம் நகராட்சியின் அவசரக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆற்றப்பட்ட ஜும்ஆ உரை வீடியோ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாம்புக்கு பால் வார்காதீர்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[22 December 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24742
அஷ்ஷைக் அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் ஜும்ஆ உரையில், நமது நகராட்சியின் நாகரீகமற்ற செயலை குறித்து மிக வேதனையுடைய ஆதங்கத்தை அப்படியே கொட்டி, நியாயவான்களையும், ஊர்ப்பெரியவர்களையும் நம் நக்ராட்சிட்யின் கண்ணியம் காக்க வாருங்கள்
என்று வேண்டுகோள் விடுத்தது அம் மஹ்லரியின் பெருந்தன்மை பயணத்தின் பிறிதொரு மைல் கல்லாகும்!
என்னதான் காரசாரமான விவாதங்கள் நடந்தாலும்
ஒரு தலைவியான ஒரு பெண்மணியை பார்த்து ,"வவுந்துவிடுவேன்" என்ற கொலை மிரட்டலோடு கொக்கரித்து குதித்து செல்லும் காட்சியைப் பார்க்கும் எந்த நடுநிலையானவர்கள்தான் ஏனோ தானோ வென்று இருக்க முடியும்?
நம் உயிரினும் மேலான புனித இஸ்லாம் மார்க்கத்தின் கலாச்சாரத்தை கேலி செய்யும் வார்த்தைகளை கொட்டுகிறார்! அவருக்கு அந்தரங்கமாக அனைத்து சக்திவாய்ந்தவர்களின் தூண்டுதலும், துணையும் கிடைக்கிறது!
எதிரிக்கு எதரி என் நண்பனே என்ற மனப்பான்மையுடையவர்களின் ஊக்கத்தை ஊன்றுகோலாக கொண்டு நம்முடைய கையை வைத்தே நம்மவர்களையும்,
நம் புனித மார்கத்தையும் மெது, மெதுவாக மானபங்கபடித்தி கொண்டிருக்கிறார்.
எவரும் என்னை நெருங்காவண்ணம் பாதுகாப்பான பெரிய சக்தியின் பிரியதுக்குறியவன் நான் என்ற இறுமாப்புடைய எதேச்சிகார செயல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது!
இதற்கொரு விடிவு காலமே வராதா?
ஒன்று மட்டும் சொல்கிறேன், தலைவி முதல் அனைத்து உறுப்பினர்களையும் மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள். நீங்கள் செய்யும் செயல்பாடுகள் சரிதான் என்று குதித்துகொண்டிருக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்களே! உங்களுக்கு தைரியமும் திராணியும் இருக்குமேயானால் கூண்டோடு விலகி மீண்டும் மக்கள் முன் சென்று அவர்களின் ஆதரவு என்ற நல் அத்தாட்சியை பெற முயற்சியுங்கள் பார்ப்போம்!
அடித்து சொல்கிறேன் நீங்கள் அனைவர்களும்
100%க்கு100% டெபாசிட் இழப்பது உண்மை!
நம்மவர்கள், நம் எதிரியை பழிதீர்க்க
எத்தீயவனையும் துணை கொள்ளலாம் என்ற வெறியோடு, எந்த எதிர் நிலையையும் பாராமல் பாம்புக்கு பால் வார்த்து கொண்டிருக்கிறார்கள்.
உஷாராக இருங்கள்! உங்களை விட அதிக பால் தருபவரிடம் அப்பாம்பு செல்ல நேரிட்டால் உங்களையும் தீண்டிவிட்டு சந்தோசமடையாமல் செல்லாது ஜாக்கரதை!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross