Re:...உணவே மருந்து மருந்தே உணவு.. posted bymackie noohuthambi (kayalpatnam)[23 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24754
கட்டுரை ஆசிரியர் அவர்கள் பல வண்ணங்களை கலக்கி இனிய இல்லங்களுக்கு மெருகூட்டும் தொழிலதிபர் என்பது பலருக்கு தெரியும். ஆனால் மருத்துவ துறையில் தன் எண்ணங்களை பதித்து மக்கள் உள்ளங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி மருத்துவர்களின் சேவையை ஒட்டியும் வெட்டியும் பேசி எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்கிறார். இதைப்பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
ஒளிமயமான எதிர்காலத்தை பற்றி கனவு கொண்டிருப்பவர்கள் தொழில் மயமான ஒரு இந்தியாவை வரவேற்கவே செய்வார்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு மருத்துவம் பயன்பட்ட காலம் போய் அதுவும் ஒரு தொழில் மயமான லாபம் சம்பாதிக்கும் ஒரு இடமாக மாறி விட்டதுதான் வாடிக்கையான வேடிக்கையான வேதனையான உண்மை..
"நோய் நாடி நோய் முதல் நாடி...." என்று திருக்குறள் சொன்னதை நோயாளியின் "முதல்" எப்படி இருக்கிறது என்று பார்த்து அதை நாடி சிகிச்சை செய்வதற்கு என்று புதுக்குறளாக புதிய அர்த்தம்கொடுத்து மருத்துவ வல்லுனர்கள் இன்று மக்கள் மத்தியில் நடமாட ஆரம்பித்து விட்டபின் எத்தனை மருத்துவ கல்லூரிகள் வந்தென்ன எத்தனை மருத்துவர்கள் உருவாகிஎன்ன. இதயமாற்று சிகிச்சைகளில் உச்சத்தில் நிற்பவர்கள் மற்றவர்கள் இதயத்தில் உயர்ந்து நிற்க முடியவில்லை.
பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏதடா.. பதைக்கும் இதயத்தை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள் தானடா. மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் கங்கையே சூதகமானால் எங்கே நீராடுவது., கூவங்களை காவிரிகள் குளிப்பாட்டுகின்றன. யாரிடம் போய் சொல்வது.
பாலியல் பலாத்காரம் என்ற புதிய பரிணாம வளர்ச்சி இப்போது மருத்துவ துறையிலும் பதிவாகிறது. தொட்டில் குழந்தைகளை விற்பது, கத்திரிக்கோலை உடல் உள்ளே வைத்து தைப்பது. சமீபத்தில் வந்த செய்தி ஒரு தாயின் கர்ப்ப பையில் ஒரு கிரிக்கெட் பந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.... இந்த செய்திகள் எல்லாம் நம்மை சிந்திக்க வைக்கிறது. நோயாளி பழைய கால பழமொழியாகிய "மருந்தே உணவு, உணவே மருந்து" என்று பாட்டி வைத்தியம் பார்த்தால் கூட நிம்மதியாக சாகலாம் என்ற நினைவில் தினம் தினம் செத்து பிழைக்கிறான்.
இஸ்லாம் கூறும் மருத்துவம் நபிகள் நாயகம் சொல்லும் மருத்துவ குறிப்புகள் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. அல்லாஹ்வை பற்றிய பயம் ஒன்று மட்டுமே இந்த நோய்க்கெல்லாம் தீர்வு. மருத்துவர்கள், நோயாளிகள் செவிலியர்கள் இன்னும் எந்த துறையில் இருந்தாலும் அல்லாஹ் நம்மை தண்டிப்பான் கேள்வி கேட்பான் என்ற அச்ச உணர்வு இருந்தாலே போதும் எல்லா துறையும் மனித நேயம் மிக்க துறையாக மாறும். அதுவரை இந்த நிலை தொடர்வதை தவிர்க்க முடியாது.
எனவே அல்லாஹ்விடம் பிரார்த்திவிட்டு இரண்டு ரகாத் நபில் தொழுதுவிட்டு பின்பு மருத்துவரை நாடும் அணுகுமுறையை முஸ்லிம்கள் எல்லோரும் கடைபிடிப்போம்,நமது KMT மருத்தவமனை வாசலிலே ஒரு வாசகம் காணப்படுகிறது.
VALLAAHU SHAAFEE ...VA ITHA MARILTHU VAHUVA YASHFEEN.அல்லாஹ்வே சுகமாக்குபவன். நான் நோயுற்றால் அவனே நோயை நீக்குபவன். இந்த வைரவரிகளை நாம் எல்லோரும் மனதில் நிறுத்தி வாழ , இறைவனிடம் கை ஏந்துவோம் அவன் மக்கள் உள்ளங்களில் மருத்துவர்கள் எண்ணங்களில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவான்.....
ஆசிரியருக்கு அல்லாஹ் நோயில்லா வாழ்வையும் குறைவில்லா செல்வத்தையும் நீடித்த ஆயுளையும் கொடுத்து அருள்வானாக. மக்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுத அருள்புரிவானாக.,
அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்
இல்லார்க்கு வழங்கி வாழ்வோம்
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross