செய்தி: DCWவின் இல்மனைட் ஆலையை மூடுக! சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆலையை ஆய்வு செய்க!! காயல்பட்டினம் வந்த சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் KEPA வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சீனாஸ் அவர்களே, ஒரே கவுத்தா கவுத்திபுட்டிங்களே? MLA அது, இதுன்னு. "சிந்திக்க சொன்ன மார்க்கத்தில் சிந்திக்க மறுக்கின்றனர், சிந்தனையை எதிர்கின்றனர். உனக்கு வழிகாட்ட வேத வரிகளும், தூதர் மொழிகளும் இருக்கின்றன. அதை மட்டும் பின்பற்று". எங்கோ கேட்ட ஒரு மந்திரம் என் காதில் ஒலிக்கின்றன. இது நம்ம ஊரைச் சார்ந்த சிலருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
காக்கா நான் உங்களை சாபம் விட, நான் உங்களால் பாதிக்கப்படவில்லை. சாபம் விடக்கூடிய அளவுக்கு (என்னைப்பற்றி தெரியாதவர்களுக்கு) நான் யோக்கியனும் இல்லை. கடந்த 24/12/2012 அன்று kepa அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், நம் நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கிர் அவர்கள், DCW விஷயத்தில் நகர்மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் எந்த விசயத்தில் அவர்களுக்கு ஆதரவாகா நடந்து கொண்டோம், எந்த விஷயத்தில் kepa வுக்கு எதிராக நடந்துகொண்டோம் சொல்லுங்கள். வீணாக ஏன் எங்களை மனம் நோகும்படி செய்கிறீர்கள் என கேட்டார். இதற்க்கு பதிலளித்த kepa செயலாளர் அவர்கள், அனைவர்களின் ஒத்துழைப்புடன் தான் kepa செயல்படுகிறது. kepa எந்த உறுப்பினரையும் குறைசொல்லவில்லை. என்று அழகாக கூறினார்.
நான் கேட்கிறேன், ஒருவர் செய்யாத தவறை அவர்மீது சாட்டினால், அவர் பாதிக்கப்பட்டவராகி விடுவார். பாதிக்கப்பட்டவர் அல்லாஹ்விடம், "யா அல்லாஹ் யார் ஏன் மீது வீண்பழி சுமத்துகிறாரோ அவர்மீது உன் கோபப்பார்வையை காட்டுவாயாக" என பாதிக்கப்பட்டவர் துஆ கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? அதைதான் நான் சொன்னேனே தவிர, நான் சாபம் விடவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அது என் தவறில்லை.
அதற்காக எல்லா உறுப்பினர்களும் உத்தமர்கள், யாருமே தவறு செய்யமாட்டார்கள் என்று நான் சொல்லமாட்டேன். அவர்களின் பெயரை சொல்லி அடையாளம் காட்டி கேவலப்படுத்துவோம். இதுதான் என் எண்ணமும்.
யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. யார் செய்தாலும் தவறை தவறு என்று உரக்க சொல்லணும், நல்லாதை பாராட்டனும். இரண்டிற்கும் மனது வேண்டும். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே, பேர் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள். இதற்கு மேல ஏதாவது சொன்னால் சாமியார் சாபம் விடுகிறார் என்று சொல்லி விடுவீர்கள். நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross