செய்தி: கே.வி.ஏ.டி. அறக்கட்டளை - ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ இலவச முகாம்! ஆயிரத்திற்கும் அதிகமானோர் மருத்துவ ஆலோசனை பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒரு சந்தேகம்? posted bymackie noohuthambi (kayalpatnam)[31 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24826
KVAT சகோதரர்களின் அல்லது அவர்கள் குடும்பத்தார்கள் ஊர் நலனில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறார்கள் என்பதை பட்டியல் போட்டால் எனக்கு கை உளைச்சல் ஏற்படும். சில தனவந்தர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் நாம் முந்திக் கொள்ளவில்லையே என்று.
எனது இதயம் நிறைந்த நண்பர் ஹபீப் முஹம்மது அவர்கள் எல்லா தரப்பினரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து நிகழ்ச்சியை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
நமதூர் மக்களின் ஆதரவுடன் வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் KMT மருத்துவமனை வளாகத்தில் இந்த பெயர் பெற்ற மருத்துவர்கள் முகாம் நடைபெற்று இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும். அதன் வளர்ச்சிக்கு இன்னும் எவ்வளவு வலு சேர்த்திருக்கும் என்ற சிலரின் சந்தேகங்களுக்கு என்னால் விடை கொடுக்க முடியவில்லை. எனக்கும் கூட அந்த சந்தேகம் வந்து மறைந்ததுண்டு. அதை உங்களிடம் நேரில் கேட்க எனக்கு துணிவில்லை, பயம் காரணம் அல்ல, ஒரு உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரரின் பிம்பத்தை - ஒரு பொன்மன செம்மலின் இதயத்தை அது காயப்படுத்தி விடக்கூடாதே என்ற அச்சம்தான். எனவேதான் என்னிடம் கேட்டவரிடம் உங்களிடமே கேட்கும்படி சொன்னேன். யாரும் கேட்டார்களா..
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே, உரிமைகளை பெறுவதெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross