ஓடிப்போதல்! மார்க்கம் ஒன்று தான் தீர்வு-1 posted byZainul Abdeen (DUBAI)[03 January 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24870
தொடர்ச்சி..,,
நமது பெண்களை இதிலிருந்து காப்பாற்ற இஸ்லாம் போதித்ததை அன்றி வேறொன்றும் இல்லை.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம் இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
நம்மதூரை பொறுத்தவரை இந்த சீர்கெடுக்கு முக்கிய காரணமாக இருப்பது செல் பேசி (Mobile phone ) என்று சொன்னால் மிகையாகது. wrong call ல் தொடங்கி, missed call ல் தொடர்ந்து, முறையற்ற, நாகரீகமற்ற உரையாடலில் வந்து முடியும்.
தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது,அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற நாகரீகமற்ற , ஒழுக்க கேடான பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
எழுத்தாளர் சொன்னதை போன்று ஊரு பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இதற்கு முற்றுபுள்ளி வைக்க முன்வர வேண்டும். அவர்களும்தான் என்ன செய்வார்கள் , பெற்றோர்களுக்கு அடங்காத பிள்ளைகள் எப்படி ஊருக்கு அடங்கும்.
இப்படிதான் ஒரு முறை சில பள்ளி மாணவர்கள் தங்களின் இரு சக்கர வாகனத்தை வைத்து கொண்டு sea customs road (YUF ) அருகில் தார் மாறாக ஓட்டி (பெண்களை கவரும் எண்ணத்தில்) பந்தா காட்டி வந்தனர் இதை தடுக்க முற்பட்ட அந்த தெரு சமுதாய ஆர்வலர் ஒருவரை ஆள் வைத்து அடித்ததை நாம் மறந்திருக்க மாட்டோம்.
ஒழுக்கங்களையும், நற்பண்புகளையும் கற்று கொடுக்க வேண்டிய பள்ளி கூடங்களே , சினிமா படங்களையும், பாடல்களையும் பட்டி மன்றம் என்ற பெயரில் ஊக்குவிகின்றன. அதை எதிர்த்து கண்டனம் தெரிவித்தும் அதற்கு இன்றுவரை மன்னிப்பும் கேட்ட தாக தெரியவில்லை.
இதற்கெல்லாம் ஒரே வழி மார்க்க கல்வி மட்டும் தான். மார்க்கத்தை பற்றி அடிபடையாவது தெரிந்து இருக்க வேண்டும். வாரம் இருமுறை நடக்கும் மார்க்க கல்வி கூடங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி இந்த சீர்கேடில்லிருந்து காப்பற்றி நம் பிள்ளைகளை நன் மக்களாக்கி ரசூலே கரீம் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நாமும் நம் மக்களும் நடந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிவானாக ... ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross