விழிப்புணர்வு & பாரேன்டிங் !! posted bySalai.Mohamed Mohideen (USA)[04 January 2013] IP: 71.*.*.* United States | Comment Reference Number: 24885
நல்லதொரு கட்டுரை. இவைகளை பளிச்சென்று பொட்டில் அறைந்தாற்போல நம் பசீர் காக்காவால் மட்டும்தான் நமக்கு உணர வைக்க முடியும். அவர் வைத்த புள்ளிக்கு எனக்கு தெரிந்த கோலம் (தீர்வுகள்).
இதற்கு ஒட்டுமொத்த சமுதாயமுமே பொறுப்பு. இன்றுவரை இதனை ஒரு தனிமனித / குடும்ப பிரச்சனையாகவே கருதுகின்றோம். ஆரம்பத்திலேயே இதனை ஒரு சமுதாய பிரச்சனையாக அணுகி... பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்து, மூல காரணத்தை கண்டறிந்து அதனை களைவதற்கான - தடுப்பதற்க்கான ஒரு கூட்டு முயற்சியை எடுத்திருப் போமேயானால் இன்றைக்கு இந்தளவுக்கு புலம்பி கொண்டிருக்க மாட்டோம்.
இக்காலகட்டத்திலும் கூட இது போன்ற அவலங்களை சமூக அக்கறையுடன் ஒரு விவாத தளத்துக்குள் கொண்டுவந்து வெளிப்படையாக சீர்படுத்த தயங்கு கின்றோம். காலம் ஒன்றும் கடந்து விடவில்லை... முயற்சி எடுப்போம் சமூக மாற்றத்தை உருவாக்குவோம்.
1. முதலில் 'அவ / அவர் மகள் ஓடிப்போயிட்டாலாம்' என்று ஆல்-இந்தியா ரேடியோ போல் செய்தியை ஊரெல்லாம் (காது கண் வைத்து... டமாரம் தட்டாத குறையாக) தம்பட்டம் அடிக்கும் (குறிப்பாக பெண்கள்... மன்னிக்கவும் !) பழக்கத்தை கைவிடுவோம்.
2. டிவி-செல்-இன்டர்நெட் மனித வாழ்வின் அடிப்படை ஒன்றாகிவிட்டது. மேற்கத்திய உலகத்தில் இவைகளனைத்தும் எப்பவோ மிகச்சாதாரண எளிதான ஒன்றாகி விட்டது. நமது நாட்டிலும் - ஊரிலும் அதே கதை தான். இவைகளை தாண்டிதான் நம் சமூகம் முன்னேற வேண்டும் என்பதனை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
LED டிவி, இன்டர்நெட், Iphone என்று அனைத்து நவீனங்களையும் அள்ளித்தந்த நாம்... இந்த நவீன யுகங்கள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த படுகின்றது & parental control tools செட் பண்ணி தவறாக பயன்படுத்துவதை எப்படி தடுப்பது என்ற அடிப்படை அறிவை (educate ) - விழிப்புணர்வை (awareness ) நம்மில் எத்தனை பேர் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லி தந்திருக்கின்றோம்... ?
நவீனங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க - கறாராக கண்காணிக்க ... ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான விழிப்புணர்வை & கலியுகத்தில் பிள்ளை வளர்ப்பு (parenting) பொது நிகழ்ச்சிகளை அவ்வப்போது சமூக அமைப்புகள் - காயல் நல மன்றங்கள் நமதூரில் நடத்தினால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை சமூக விசயங்களில் நமதூர் காணும் என்பது மட்டும் நிச்சயம்.
பெற்றோர்கள் - குடும்ப பெரியவர்கள் மட்டும் விழிப்புணர்வை பெற்று விட்டால்... சமூக அவலங்களின் எண்ணிக்கை பாதியாகி விடும். மீதி பாதியை ஊர் அமைப்பு - ஆர்வலர்கள் கொண்டு சரி படுத்தலாம்.
3. இது ஒரு சென்சிட்டிவான ஊர் - சமூக பிரச்சனை. இதனை ஒரு வலுவான 'ஊர் அமைப்பை' கொண்டு தான் சரிபடுத்த இயலும். இது போன்ற அனைத்து சமூக அவலங்களையும் துணிவுடன் எதிர்கொள்வதற்கு (சமூக ஆர்வலர்கள் - இளைகர் பட்டாளம்) களத்துக்குள் நுழைந்து விட்டார்கள். சமீபத்திய போராட்ட களங்களே இதற்கு சாட்சி.
இவர்களை போன்றோருக்கு (அடுத்த தலைமுறையினருக்கு) கண்ணியமிக்க நம் பெரியவர்கள் வழிவிட்டு - முன்னிலைபடுத்தி வழிநடத்துவார்களானால்... நல்ல பல சமூக மாற்றங்களை காண இயலும். நம் பேரவை வலிமை படுத்த - சீரமைக்க படவேண்டும். அப்படி ஒருவேளை நடந்து விட்டால் இவ்விடயத்தில் அல்லது இது போன்ற பொது பிரச்சனைகளில் நாம் பாதி கடல் தாண்டி விடலாம்.
4. கடைசியாக நம் கை விட்டு போன சகோதர- சகோதரிகளின் (10 samples - Confidential ) பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசி இச்சமூக அவலத்திற்கான உண்மையான நேரடி - மறைமுக காரணங்களை (Root cause ) ஊர் அமைப்பினர் கண்டறிந்து அதனை எப்படி தடுப்பது அல்லது எப்படி மக்களை பாதுகாப்பது என்று எல்லோருக்கும் கூறுங்கள்.
5. தவறான முடிவினால் தன் வாழ்வை கனவுகளை கயவர்களிடம் தொலைத்து நம்பி ஏமாந்த பலரின் கடந்த கால நிகழ்வுகளை நிதர்சனங்களை பகிர்ந்து பருவ வயதினரை விழிப்புணர்வு செய்யுங்கள்.
6. பருவ வயதினருக்கான மாதமொருமுறை 'ஹலக்கா - தர்பியா' க்கள் ஒவ்வொரு பெண்கள் தைக்காவிலும் - பொது இடங்களில் நடத்தலாம்.
7. அசர் நேரங்களில் வெட்டியாக எதையாவது நண்பர்களிடம் (பெற்றோர்கள்) பேசுவதை விட, பிள்ளைகளின் எதிர்காலம், படிப்பு, நடவடிக்கைகள் பருவ மாற்றங்கள் போன்றைவைகளை டிஸ்கஸ் பண்ணி எண்ணங்களை - அறிவை பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்.
சக மனிதனுக்கு ஏற்படும் சமூக அவலங்களை வேடிக்கை பார்க்கும் கைகொட்டி சிரிக்கும் புறம் பேசித்திரியும் அற்ப மனிதர்களாய் காலத்தை தள்ளாமல், 'தான்.. தன் குடும்ப பாதுகாப்பு மட்டுமே பெரிது' என்ற குறுகிய வட்டத்துக்குள் (சுயநலம்) அடைந்து கொள்ளாமல்... சமூக அக்கறையுடன் ஒன்று கூடி தேரிழுப்போம். சமூக அவலம் துடைப்போம் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross