செய்தி: முஸ்லிம் லீக் வலிமையாக இருக்கும் இடங்களில் சமுதாய ஒற்றுமையும் - மதநல்லிணக்கமும் வலிமையுடன் இருக்கிறது! காயல்பட்டினத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bymohmedyounus (muscat)[04 January 2013] IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 24893
இங்கே நாடாளு மன்ற உறுப்பினர் தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கில்லிவிட்டுள்ளார். ஒற்றுமையே சிறப்பு என்று கூறிவிட்டு, காலையில் கைதாகி மாலையில் வெளியில் வரும் இயக்கங்கள் என்று..... சில இஸ்லாமிய இயக்கங்களை சாடை மாடையாக குறுப்பிட்டு உள்ளார். அவர்கள் நடத்தும் போராட்டத்தை இது கொச்சை படுத்துவாதாக உள்ளது. ஏன் காலையில் கைதாகி ஒரு வருடம் கழித்து ஒரு நாள் மாலையில் வெளிய வர வேண்டும் என்று எதிர்பார்கின்றாரோ என்னமோ தெரியவில்லை.
இன்று சாலை மறியல்,ஆர்ப்பாட்டம் கூட ஜனநாயக போராட்டமாக மாறிவிட்டபின், அத்தகைய போராட்டத்தைக் கூட கொச்சைபடுத்தும் பேசும் உங்களின் நிலையை பார்த்து பரிதாபமாக உள்ளது. ஏன் காலையில் கைதாகி மாலையில் வெளியில் வரும் போராட்டம் மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்ததா? எத்தனை குருதி தானம் முகாம்கள், மது எதிர்ப்பு போராட்டங்கள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு மாநாடுகள்..... தன் இயக்கத்தின் அடிமட்ட தொண்டன் கூட கைதான உடனே அங்கே ஆர்பரிக்கும் தொண்டர் கூட்டம், தலைவர்களின் அர்பணிப்பு... வேகம்,, விவேகம்.... இதனால் தான் அவர்கள் இன்றும் வீரியமிக்க இயக்கமாகக் காட்சி தருகின்றனர்... காயல் மகபூபின் ஒருவருட சிறை வாழ்க்கை ஒன்று போதாதா! அவர் காலத்தின் சூழ்ச்சியால் இன்று எதோ பேசலாம். உண்மை வரலாறு எல்லோருக்கும் தெரியும்.
இத்தகைய வீரியமிக்க தொண்டர் கூட்டம் நம்மிடம் இல்லையே என்பதன் வெளிப்படுதான் உங்களின் இந்த உரை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross