செய்தி: ஊர் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், அனைத்து சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும்! காயல்பட்டினத்தில் உரையாற்றிய முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..நாம் இனியாவது சிந்திக்க வேண்டும்!. posted byOMER ANAS (DOHA QATAR.)[05 January 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24911
அஸ்ஸலாமு அழைக்கும்!
நமது அருமைச் சகோதரரின் பேச்சில் இருந்து நாம் நிறைய்ய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது!
மாஷா அல்லாஹ். மிகத் தெளிவாக ஒரு பாமரனுக்குக் கூட புரியும் படி இன்றைய நிலையினையும், நாளை நாம் இதற்க்கு என்ன பரிகாரம் செய்திட வேண்டும் என்று தனக்கே உரித்தான அக்கறையோடு உரையாற்றிய தம்பி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்களின் உள்ளத்தில் இருந்து எழுந்த உணர்ச்சி மிகு பேச்சுக்கு மிக்க நன்றி!
அன்றைக்கு தலைவர் பதவிக்குத்தான் போட்டி நடைபெற்றது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் அன்றைய பெரியவர்கள் நமதூர் நன்மைக்காகவே பஞ்சாயத்து நேரத்தில் மட்டும் இன்றி, மாலை நேரங்களில் வட்ட சதுக்கைகளில் தூணுக்கு தூண் அமர்ந்து நமதூர் நன்மைக்காகவே வேண்டி ஒவ்வொருவர்களும், நமதூரைக்காக்கும் பெரிய தூணாகவும், கோட்டை சுவராகவும் இருந்தார்கள். அவர்களின் நல்ல சிந்தனைகளுக்கு கட்டுப்பட்டு பெரியோர்களை கண்ணியமாக மதித்து வந்தார்கள் அவர்களின் வழி வந்தவர்கள்.
இன்றைய தலை முறை அது போன்ற கண்ணியவாலர்களுக்கே வழி காட்ட தலைப்பட்டு விட்டது!
இன்றைய பஞ்சாயத்தின் நிலைமைக்கு நாமும் ஒரு காரணமே!
நாம் இனியாவது இந்த சமுதாய கொள்கையுடைய தம்பி சொன்னது போல் ஒரு கூட்டு சக்தியாக நின்று நாளை செயல் பட வேண்டும். அதற்கு கண்ணியமிகு பெரியோர்களின் நல்ல அறிவுரைகளும், அதை சிரமேல் கொண்டு கூட்டாக நின்று செயல் வடிவம் கொடுக்க வந்த இன்றைய KEPA போன்ற நல்ல இயக்கங்களுடன் மனதார நாம் நம்மை இணைத்துக் கொள்ளல் வேண்டும்! அல்லது வெளியில் இருந்தாவது அவர்களை பாராட்ட வேண்டும்.
இனியாவது நாம் சிந்திக்க வேண்டும்!
மாற்றம் நமதூருக்கு நாளை வரும் என்று துஆவுடன்,
உமர் அனஸ்!
தோஹா கத்தார்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross