Re:..சின்னபிள்ளைதானே இணையத்தளத்தில் அல்ல இதயத்தின் அடித்தளத்தில் பதிவு செய்ய வேண்டிய செய்தி posted bymackie noohuthambi (kayalpatnam)[07 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24931
அருமையான சிந்திக்க வைக்கும் "பெற்றோருக்கு!" என்ற தலைப்பில் வழங்கப்படவேண்டிய அற்புதமான கடிதம். MRM அப்துர் ரஹீம் இப்போது இருந்தால் அதை தான் செய்திருப்பார்கள். ஆனால் முகவரிகள் தொலைந்ததனால் முகிலினங்கள் அலைகின்றனவே என்பது போல் இப்படி இணையத்தளத்தில் இதை வெளியிட்டு ஒரு குறிப்பிட்ட வலைப்பூவில் இருப்பவர்கள் மட்டும் படிக்க செய்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி தாய்மாரிடம் கொடுக்கப்பட வேண்டிய அற்புதமான அறிவூட்டும் கருத்து கருவூலம் இது....ஜும்மாவில் நோட்டிஸ் ஆக வெளியிட்டால் கை துடைக்க ஒரு காகிதமாக போய்விடும். எனவே 1000 நோடிஸ்கள் அச்சடிக்கப்பட்டு வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. எனக்கு அந்த பொறுப்பை தாருங்கள் எனக்கும் நன்மையில் பங்கு கிடைக்கும்.இதற்கு பொருளாதார வசதிகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.
உங்கள் முயற்சியால் ஒருவர் ஹிதாயத் பெற்றால் அது இந்த உலகம் அதிலுள்ள எல்லாவற்றையும் விட உங்களுக்கு சிறப்பானது என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்வதாக உலமாக்கள் சொல்வார்கள். எனவே உடனடியாக இதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் அதற்கு துணை நிற்பான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross