செய்தி: வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிறுவனருக்கு "நற்சேவை விருது" ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரால் மக்காவில் வழங்கப்பட்டது !! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயலர்களின் கருணை காரியம் காற்றட்டு வெள்ளம் போல் பாயட்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[07 January 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24933
சகோதரர் மக்கி நூஹுதம்பி காக்கா சொல்வது போல நல்ல காரியத்தை பாராட்டுவது வெறும் புகழ்ச்சியகாது அது அடுத்தவர்களையும் தூண்டச்செயும் ஒரு டானிக் ஆகும்!
மேலும் அவர்கள் குறிப்பிட்டது போல் நமதூரில் நிறைய கருணை உள்ளமும்,கொடையுள்ளமும் கொண்ட கண்ணியவான்கள் இலைமறை காயாக இருந்து வருகிறார்கள்,அப்படிப்பட்ட புண்ணியவான்களின் பேருதவியைப்பெற்றவர்களின் துவாவின் பொருட்டால்தான் நமதூர் வல்ல நாயகனின் உதவியால் வறுமை என்ற வீழ்ச்சி பள்ளத்தில் வீழ்ந்து விடாமல், ஓரளவிற்கு ஒட்டியிருக்கும் ஊர்களைவிட வளம்பெருகின்ற பாதையை நோக்கி நிற்கின்றோம்!அல்ஹம்தில்லில்லாஹ்!
வருடம் 365 நாளும் ஏழை எளியவர்களுக்காகவும் ,ஏழை மாணவர்களுக்காகவும் ,உயிகொல்லி நோய் முதல் ஏனைய செலவு அதிகமாகும் நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்காகவும் தங்களின் இரும்புப்பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு இதயமகிழ வாரி வழங்கும் வள்ளல்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களையும் பாராட்ட வேண்டும்!
எப்படிப்பட்டவர்கள் என்ற ஒரு சில உதாரணம் சொல்ல வேண்டுமாயின், ஒரு ஏழை இதய நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு பெரிய தொகையை வழங்கியதோடு நிற்காமல்,அவருக்குறிய மாத்திரைகளைக்கூட பல வருடங்கள் கொடுத்துதவி வரும் கருணை கலந்த கொடையுள்ளமும் இன்றும் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள்!
ஆதரவற்ற முஸ்லிம் ஏழை மாணவர்கள் விடுதியில் பாயில் படுதிருந்த மாணவர்களைப்பார்த்த ஒரு கருணை காயல் உள்ளம் இவர்கள் அனைவருக்கும் உடனே மெத்தை (BED) வாங்கி கொடுங்கள் என்று கூறி அதற்குகுறிய தொகையை யும் செலுத்தி விட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார்!
வெளிநாட்டிலிருந்து விடுதியின் சம்பந்த பட்டவரிடம் மெத்தை வாங்கி கொடுத்தாகி விட்டதா?,பிள்ளைகள் எல்லாம் BED யில் தானே தூங்குகிறார்கள்? அவர்கள் BED ல் தூங்குகிறார்கள் என்ற செய்தியை கேட்ட பின்னர்தான் எனக்கே தூக்கம் வரும் என்ற வார்த்தையை போனில் சொல்லியிருக்கும் இம்மனிதருள் மாணிக்கங்களை எல்லாம் அடயாளம் கண்டு அவர்களையும் கவ்ரிவிக்க வேண்டுவது ஒரு உண்மையான மனசாட்சி உள்ள காயலனின் கடமையாகும்!
அப்படிப்பட்ட கருணை காரியங்களை எல்லாம் எல்லோரும் எளிதில் தெரியும் வண்ணம் ஜித்தா காயல் நலமன்றம் முன்மாதிரி முத்தாய்ப்பான காரியத்தை செய்த கையோடு இனி வரும் காலங்களிலும் செய்ய சித்தமாகி விட்டது என்பதற்கோர் முன்வடிவ செயல் தான் நற்சேவை விருது வழங்கிய நிகழ்ச்சி!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross