செய்தி: கடையக்குடி கழிவுநீரோடையில் DCW ஆலை சார்பில் பராமரிப்புப் பணிகள்! உடனடியாக நிறுத்தக் கோரி KEPA சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரகத்திற்கு தொலைநகல் மூலம் முறையீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதை எதிர்த்து போராட மக்கள் சக்தி விழிப்புணர்வு பெற்று ஒற்றுமையை கடைபிடிக்கும் நேரம் நெருங்கி விட்டது... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[08 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24943
கடல் நீர் தொழிற்சாலையின் புறவாயில் வரை இருக்குமாறு மட்டுமே வெட்டிவிடப் போவதாகக் கூறியதாகவும் தெரிகிறது. copy - paste
கடற்கரையில் (அரசுக்கு பாத்தியப்பட்ட) இடத்தில் ஒரு தனியார் கம்பெனி இப்படி வெட்டிவிட யாரிடம் அனுமதி கேட்டது...? மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் இதில் ஏதாவது ஒன்றில் அனுமதி பெற்று தகவல் கொடுத்து அல்லவா..! செய்ய வேண்டும்...
இந்த அத்துமீறல் வன்மையாக கண்டிக்க கூடியது...!
DCW தொழிற்சாலையின் கொடிய அமில கழிவு அதிகம் அங்கே நிறைந்து வழியும் சூழலால் ஏற்பட்டு இருக்கலாம் அதை கொட்டுவதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவே நினைக்க தோன்றுகிறது...
செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் தகவல் கொடுத்து மக்கள் சக்தியை திரட்டி இதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கலாம் - அப்போது பொது மக்கள் - மீனவ சகோதரர்கள் - காவல்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள், நகராட்சி ஆணையர் - தலைவர் - உறுப்பினர்கள், தாசில்தார், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் இவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து இதில் என்ன நடக்கிறது என்று விபரம் கேட்டு (நமது அச்சத்திற்கு தகவல் அறிந்து) விழிப்புணர்வு பெற்று இருக்கலாம்...
நகர மக்கள் ஒற்றுமையாக இருந்தால் கண்டிப்பாக நாம் இதை சாதிக்கலாம்...
குறிப்பு - இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கடலில் மிக பெரிய மாற்றம் ஏற்படலாம் - கொடிய அமில கழிவுகளை கொட்டவே இந்த ஏற்பாடு....! என்னால் உணர முடிகிறது..
இதை எதிர்த்து போராட மக்கள் சக்தி விழிப்புணர்வு பெற்று ஒற்றுமையை கடைபிடிக்கும் நேரம் நெருங்கி விட்டது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross