செய்தி: ஆட்டோ ஓட்டுநர்கள் பெண்களிடம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்! ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் ( அல்கோபார் )[09 January 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24961
அப்பாடா..! இப்ப தான் காவல்துறை தார்குச்சியை கையில் எடுத்துள்ளது. நன்றி கலந்த பாராட்டுக்கள்.
கடைசி அறிவுறுத்தல் சூப்பர். இது தான் முதலில் தேவை. முன்பு சைக்கிள் ரிக்க்ஷா இருந்தது. அதை ஓட்டும் நபர்களில் அதிகமானோரை மக்களுக்கு தெரியும். ஆனால்.. இன்றோ ஆட்டோ ஓட்டுபவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை யார் என்றே தெரிவது இல்லை.
ஒரு சிறு பிரச்சனையோ, ஒரு பொருளை தவறவிட்டாலோ யார், எந்த ஆட்டோ என்ற விபரங்கள் தெரிவதற்குள் தலை சுத்தி விடுகிறது.
** இந்த பூலோகத்தில் எங்கும் இல்லாத ஆட்டோ கட்டணம் நம் ஊரில் தான். பெட்ரோல் விலை இறங்கினாலும் இவர்கள் ஒரு பைசா குறைக்க மாட்டார்கள்.
( டீசல் ஆட்டோவிற்கும் இதே கட்டணம் தான்.
ஒருமுறை கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ ஓட்டுனர்,
** காக்கா நேற்று பெட்ரோல் 2 ரூபாய் கூடிவிட்டது.
** ஏன்பா.. இது டீசல் ஆட்டோ தானே. டீசல் தான் விலை கூடவில்லையே.
** டீசல் ஆட்டோவின் வண்டியின் விலை, பெட்ரோல் ஆட்டோ வண்டி விலையை விட கூடுதலுங்க. என்றாரே பார்க்கலாம். )
காவல்துறை இந்த கட்டண விசயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். ஏன் நம் ஐக்கிய பேரவை மனசு வைத்தாலே இந்த பிரச்சனை தீர்ந்து விடுமே.!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross