Re:...இளமையும் முதுமையும் posted bymackie noohuthambi (kayalpatnam)[11 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24986
82,193 பேர் 51 வயது முதல் 100 வயதுவரை உள்ளவர்கள் சென்ற வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது.
இளமையில் செய்யும் அமல்களுக்கு அதிக நன்மை உண்டு என்று ஆலிம்கள் சொல்கிறார்கள்.
இப்போது என்ன அவசரம் நல்லா சம்பாத்தியம் பண்ணி விட்டு, வீடு கட்டிவிட்டு, குமர் எல்லாம் கரை ஏற்றிவிட்டு கடைசி காலத்தில் ஹஜ்ஜுக்கு போனால் இனி திரும்பி வந்து வீடு பள்ளிவாசல் என்றும் தஸ்பீகும் கையுமாக இருக்கலாம் என்று யாரோ சொல்லி வளமைப்படுத்திய ஒரு தைரியத்தில் அவர்களை இப்படி ஹஜ்ஜுக்கு போக சுணங்க வைத்திருக்கிறது. இனிமேல் போகாமல் இருந்தால் மரணம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமும் உள்ளது.இவர்கள் ஹஜ்ஜு கிரியைகளை நிறைவேற்ற எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை அவர்களை அழைத்து சென்ற உடன் சென்ற குடும்பத்தினரை கேட்டால் விளங்கும்.
தக்க முதலும் ஏறிப் போக வாகனமும் வழியில் பயமும் இல்லாமல் இருந்தால் ஹஜ்ஜுக்கு போவது கடமை என்றுதான் நம் முன்னோர்கள் சொல்லி தந்திருக்கிறார்கள். திரு குர் ஆனும் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்வும் வாக்கும் அதையே நமக்கு சொல்லி தருகின்றன.
எனவே 2013 இல் ஹஜ்ஜு செய்பவர்கள் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்திருப்பவர்கள் மேலே சொன்ன காரங்களை காட்டி, மேலே சொன்ன தகுதிகள் வந்த பின்னும் ஹஜ்ஜுக்கு போவதை ஒத்திப் போடாதீர்கள். HAJJ MABROOK
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross