ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை நிகழ்வுகள் குறித்து இந்திய ஹஜ் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:
*** 2012 ஆம் ஆண்டு இந்திய ஹஜ் குழு மூலம் 1,25,064 பேர் மற்றும் 88 கைக்குழந்தைகள் (2 வயதுக்கும் குறைவானவர்கள்) ஹஜ் பயணம் மேற்கொண்டனர்
*** 82,193 யாத்திரிகர்களின் வயது - 51 முதல் 100 வயது வரை இருந்தது
*** 5 யாத்திரிகர்கள் வயது 100 வயதுக்கும் மேலே இருந்தது
*** 69,035 ஆண்களும், 56,117 பெண்களும் இந்திய ஹஜ் குழு மூலம் பயணம் மேற்கொண்டனர்
*** பல முறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் 420 பேரின் பயணம் ரத்து செய்யப்பட்டது
*** 21 நகரங்களில் இருந்து 440 விமானங்கள் மூலம் 1,25,064 பேர் ஹஜ் யாத்திரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்
*** 10 நகரங்களில் இருந்து சவுதி ஏர்லைன்ஸ் மூலம் 70,683 பேர் ஹஜ் யாத்திரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்
*** 11 நகரங்களில் இருந்து ஏர் இந்திய மூலம் 54,381 பேர் ஹஜ் யாத்திரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்
*** முதல் கட்டத்தில் (அழைத்து செல்லுதல்) செப்டம்பர் 17, 2012 முதல் அக்டோபர் 21, 2012 வரை - 35 தினங்களில் யாத்திரிகர்கள், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா அழைத்து செல்லப்பட்டனர்
*** மிக அதிகமாக டில்லியில் இருந்து 60 விமானங்களில் 21,870 யாத்திரிகர்களும், 30 விமானங்களில் கொல்கத்தாவில் இருந்து 12,512 யாத்திரிகர்களும், 40 விமானங்களில் லக்னோவில் இருந்து 11,402 யாத்திரிகர்களும் - ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர்
*** இந்திய ஹஜ் குழு ஒதுக்கீட்டின் 26 சதவீத இடங்கள் உத்தர் பிரதேஷ் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டு 32,525 யாத்திரிகர்கள் அம்மாநிலத்தில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர். மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து 11,658 யாத்திரிகர்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 11,159 யாத்திரிகர்களும் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர்
*** இரண்டாம் கட்டத்தில் (திரும்பி வருதல்) நவம்பர் 16, 2012 முதல் டிசம்பர் 2, 2012 வரை - 17 தினங்களில் யாத்திரிகர்கள், சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டனர். அஹமதாபாத்தில் இறுதி விமானம் - டிசம்பர் 2, 2012 அன்று தரை இறங்கியது
*** ஹஜ் யாத்திரையின் போது - இந்திய ஹஜ் குழு மூலம் பயணம் மேற்கொண்ட 197 பயணியர் உயிர் இழந்தனர்
*** இந்திய ஹஜ் குழு மூலம் பயணம் மேற்கொண்ட பெண் பயணியருக்கு 6 குழந்தைகள் பிறந்தன
|