இஸ்லாமிய அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களின் கூட்டமைப்பான Organization of Muslim Educational Institutions and Associations of Tamilnadu (OMIET) அமைப்பின் ஏற்பாட்டில் - அறிவியல் கண்காட்சி, ஜனவரி 12 அன்று சென்னையில் நடைபெற்றது. SIET அமைப்பின் பள்ளிக்கூடங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட இப்போட்டிகள், SIET வளாகத்தில் நடைபெற்றது.
பல்வேறு பள்ளிக்கூடங்களில் இருந்து சுமார் 130 மாணவ - மாணவியர் இப்போட்டிகளில் கலந்துக்கொண்டு, தங்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். பங்குப்பெற்ற மாணவ - மாணவியர் விபரங்களை காண இங்கு அழுத்தவும்.
Physical Science, Environmental Science, Life Science ஆகிய மூன்று தலைப்புகளில் Primary, Middle, Junior மற்றும் Senior என நான்கு பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காயல்பட்டினத்தை சார்ந்த தாயும் பள்ளி நிர்வாகி ஹாஜி தௌலத் மற்றும் ஹாஜி எஞ்சினியர் ஷேய்க் அலி ஆகியோரின் பேத்தியும், டாக்டர் முஹம்மது கிஸார் மற்றும் காமிலா பாத்திமா ஆகியோரின் மகளுமான சென்னை அல்ஹிரா மாடல் பள்ளிக்கூட மாணவி - MKI பாத்திமா ஸஜியா, Physical Science தலைப்பில், Junior பிரிவில் முதல் பரிசு பெற்றார்.
அவர் Buzz of Beverage என்ற தலைப்பில் தனது படைப்பினை சமர்ப்பித்திருந்தார். இந்த படைப்பு - நாம் அருந்தும் பானங்களில் Caffeine அளவு எவ்வளவு உள்ளது என்று கண்டறிந்து தெரிவிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. சோதனையில் - காபி பௌடரில் உள்ள Caffeine - யை விட மற்ற பானங்களில் caffeine அளவு அதிகம் இருந்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவியின் படைப்பு விபரங்களை (Project Report) காண இங்கு அழுத்தவும்
தகவல்:
டாக்டர் டி.கிஸார் இர்ஷாத் |