காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்படுகிறது. 15.01.2013 அன்று காலை 10.45 மணியளவில் காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜனவரி 14ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. DCW ஆலைக்கெதிராக நம் கரங்கள் இணையட்டும் ! posted bySalai. Mohamed Mohideen (USA)[18 January 2013] IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25081
நம் கருத்து வேற்றுமைகளை
இக்கடலில் கரைத்திடுவோம்
நம் கொள்கை வேறுபாடுகளை
நமக்குள் பூட்டி மறைத்திடுவோம்
நம் கடந்த கால மனக் கசப்புகளை
அடி மண்ணில் புதைத்திடுவோம்
சிலசமயம் வந்து செல்லும் செல்லச்
சண்டைகளை காற்றில் பறக்க விடுவோம்
சிறியவர் பெரியவர் பாகுபாடு துறந்து
வேகத்தையும் விவேகத்தையும்
ஒரு திசையில் பயணிக்க செய்து
வலிமையான காயலை உருவாக்கிடுவோம்
சகோதரத்துவம் என்ற அடிவேருக்கு
நம் இரு கைகளால் நீருற்றுவோம்
மத இன பேதமை களைந்து DCW - க்கு
எதிராக ஓரணியில் ஒன்று திரள்வோம்
கேன்சரினால் முன்னவன் மடிந்தான் என்று
வரலாறு பதிவதை விட - அநீதிக்கெதிரான
போராட்டத்தில் தன்னை மாய்த்தான் என்று
வருங்காலத்தினர் இதயத்தில் பதிவோம்
நாளைய நம் இளைய தலைமுறையினருக்கு
ஒற்றுமையை கற்றுத் தருவோம் - ஆலையக்கழிவை
உள்வாங்காத வங்கக் கடலையும் மாசில்லா
அழகிய காயலையும் அவர்களுக்கு பரிசாகத் தருவோம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross