இந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மூலம் இன்டர்நெட் இணைப்புகளை ஏராளமானோர் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர்.
காயல்பட்டினத்தில் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ள பெரும்பாலானோர் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலமே இணைப்பைப் பெற்றுள்ளனர்.
இம்மாதம் 12ஆம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் இணைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, கூகுள் நிறுவனத்தின் இணையதளங்கள் உட்பட ஒரு சில இணையதளங்களைத் தவிர இதர இணையதளங்கள் எதையும் திறந்து பார்க்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் வினவுகையில், இன்டர்நெட் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே வழித்தடத்தில் அனைத்து இணைப்புகளுக்கும் பயன்படுத்தப்படுவதால் இத்தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், கோயமுத்தூரிலிருந்து இக்குறை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 15ஆம் தேதி (நேற்று) முதல் கோளாறு சரிசெய்யப்பட்டது. |