01.01.2013-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 10 அன்று அனைத்து வாக்காளர் பதிவு
அதிகாரிகளாலும் வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தின் வாக்காளர் விபரத்தை மாவட்ட ஆட்சியர்
ஆசிஸ் குமார் IAS வெளியிட்டார்.
1.1.2013-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் - தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 அன்று துவங்கியது. வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 10 அன்று வெளிவந்த வாக்காளர் பட்டியலில் - துபையில் பணிபுரியும் அப்பாபள்ளி தெருவை சார்ந்த காயலரின் பெயரும் (பிரிவு 99 இன் கீழ்) இடம்பெற்றுள்ளது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி - காயல்பட்டினம் வாக்காளர் பட்டியலின் முழு விபரம் - 23 பாகங்களாக காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் பிரத்தியேக பக்கத்தில் (தகவல் மையம்) - வெளியிடப்பட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும் >>
இவ்வசதி மூலம் காயல்பட்டினம் வாக்காளர்கள் - தங்கள் பெயர் இணைக்கப்பட்ட, நீக்கபப்ட்ட, திருத்தப்பட்ட விபரங்களை காணலாம்.
1. Re:... posted byFareed (Dubai)[12 January 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24999
Salam
Thanks lot to admin of kayalpatnam.com. Without your information i cannot add my name in the list.
The extra document requested by election office is passport copy attested by indian embassy,d ubai which is not mentioned in your message.
Pls keep posting useful messages.
Requesting to post the job opportunities available in the worlds which is helpful for our peoples
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross