காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்படுகிறது. 10.01.2013 அன்று மாலை 06.20 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்படும் DCW தொழிற்சாலையின் கழிவு நீரோடை கடலில் கலக்குமிடத்தில் பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜனவரி 09ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. விஷ கழிவுகளை கடலில் கலப்பதை தடுக்க ஊர் மக்கள் ஓன்று பட்டு ஒற்றுமையுடன்... செயல் வேண்டும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[12 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25003
விஷ கழிவு நீரால் கலக்கப்பட்ட கடலின் நீர் ஓரளவு பல மாதங்களுக்கு பின் அதன் இயற்க்கை நிறம் மாறுவது போன்று தெரிகிறது...! ஆனால் கடலின் கரையோர மணல் இன்னும் மாசு பட்டு செந்நிறம் மாறாமல் கொடிய கழிவு விஷத்தின் கோர காட்சி மட்டும் மாறாமல் உள்ளது ...
மாசு பட்டது.. பட்டது தான்...! இனியும் விஷ கழிவுகளை கடலில் கலப்பதை தடுக்க ஊர் மக்கள் ஓன்று பட்டு ஒற்றுமையுடன்... செயல் வேண்டும்...
தினமும் கடலின் மாற்றத்தை கண்காணித்து நகர மக்களின் கவனத்திற்கு அறிய தரும் அன்பு சகோதரர்களுக்கு இறைவனின் சாந்தியும், சமாதானமும், பாதுகாப்பும் உண்டாகட்டுமாக... ஆமின்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross