காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், பள்ளி மாணவியரின் அறிவியல் கண்காட்சி 10.01.2013 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் தலைமை தாங்கினார்.
இக்கண்காட்சியில், பள்ளியின் முதல் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியர், அறிவியல் தொடர்பான செயல்முறைகளை பட விளக்கங்களுடன், கண்காட்சியைக் காண வந்திருந்த பெற்றோர் உட்பட அனைவருக்கும் விளக்கினர்.
காற்று - நீர் - நிலம் மாசடைதல், புவி வெப்பமயமாதல், நீர் சுழற்சி, நீர் - காற்று - சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்தல் போன்ற செயல்முறைகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியில் காட்சிப் பொருட்களை இடம்பெறச் செய்து, விளக்கமளித்த மாணவ-மாணவியரை பள்ளி நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி பாளையம் எஸ்.எம்.முஸ்தஃபா ஆகியோரும், பெற்றோரும் பாராட்டினர். |