Re:...இளமையில் இன்பம் தரும் இனிய ஹஜ்ஜு ,,,,,, posted bynizar (kayalpatnam)[12 January 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 24996
ஹஜ்ஜு என்றாலே வாழ்கையில் நாமும் ஒரு தடவை போகவேண்டும் என்ற எண்ணம் இன்றைய காலத்தில் மேலோங்கி வருகிறது. ஆனால் அதற்கான செலவுகள் நாளுக்கு நாள் எகுறி வருகிறது. தனியார் சர்வீசுகளில் சாமான்ய மக்கள் நினைத்து கூட பார்க்கமுடியாது.
சொகுசுகளும் வசதிகளும் உள்ளடக்கி விலை உச்சத்தை அடைந்து வருகிறது. சாமான்ய மக்கள் செல்லும் ஹஜ்ஜு கமிட்டியும் விலையை அதிகரித்து உள்ளது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
நூஹு தம்பி avargal சொல்வதுபோல் இளமயில் ஹஜ்ஜு என்பது இனிமையும், சந்தோசமும் கொண்டது. சில சகோதரர்கள் வசதி வந்தும் அலட்சிய போக்காலும், எல்லா தேவைகளும் முடித்துவிட்டு போவோம் என்ற அறியாமையிலும் காலத்தை வீணாக்கி கடைசியில் தள்ளுவண்டியில் தவ்வாபு செய்யும் நிலமயுக்கும், ஒரு எட்டு தம்மால் வைக்க முடியாத சொல்லன்னா துயரமும் அடைவதை ஹஜ்ஜில் நேரடியாக காண முடிந்தது.
இதை விட குடும்பமே இந்த வயதான ஹாஜியை தங்கள் உடமைகளை பாதுகாக்கும் காவலான ஹரமிட்கு வெளியே பல மணி நேரம் விட்டு செல்லும் கொடுமையை என்ன வேண்டு சொல்ல? எனவே ஹஜ்ஜுக்கு இளமை, முதுமை என்பது இல்லை, தகுதி பெற்றுவிட்டால் உடனே ஹஜ்ஜுக்கு செல்வதுதான் என்று ஆலிம்கள் சொல்லி கேட்டுள்ளேன்.
எனவே தகுதி வந்த இளஞ்சர்கள் தங்கள் பயணத்தை வருகிற ஹஜ்ஜுக்கு தயாராகுங்கள், தகுதி வந்தும் எனக்கு இன்னும் சில கடமை உள்ளது என்று அறியாமையில் தள்ளி போடும் சகோதர்கள் செல்ல நிர்ணயிக்கும் வயது நமக்கு உள்ளதா? என்பது இறைவனுக்கு மட்டுமே அறிந்ததாக உள்ளது.
எனவே தகுதி இருந்தும் கடமையை நிறைவேற்றாத குற்றமும் நம்மை சேர்ந்துவிடும். எனவே நாம் தகுதி அடைந்துவிட்டால் இளமையிலேயே பயணத்தை கட்டிவிடவேண்டும், இரிவன் நம் அனைவருக்கும் இளமையில் இனிமையான ஹஜ்ஜு செய்யும் வாய்ப்பை மீண்டும் மீண்டும் தருவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross