Re:... posted byMauroof (Dubai)[17 January 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25071
எனது மிகுந்த பாசத்திற்குரிய மாமா அல்ஹாஜ் கத்தீபு M.M.செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மரணச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை அங்கீகரித்தும், அவர்களது பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியில் நுழைந்திடச் செய்வானாக என பிரார்த்திக்கிறேன்.
மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் எனதன்பு சொந்தக்களுக்கும், மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இப்பேரிழப்பை பொருந்திக்கொள்ளக்கூடிய மேலான பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுப்பானாக - ஆமீன்.
உதவி செய்ய வேண்டி அழைக்கப்பட்டால் ஓடோடி வருவதும் உதவி செய்யப்பட வேண்டும் என்ற நிலையை உணர்ந்தால் தானாகவே முன்வந்து உதவி செய்வதும், எல்லோருடனும் கலகலப்பாக உரையாடுவதும், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதும் மர்ஹூம் அவர்களின் சிறப்பம்சம். வருகின்ற மாதம் தனது மனைவி மக்களோடு உம்ரா புனிதப்பயணம் மேற்கொள்ள நிய்யத் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross