Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் ( காயல்பட்டினம் )[22 January 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 25180
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.
இவர்களின் மரணம் என்னில் ஒரு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது.
என் மாமா என்னிடம், சொளுக்கார் தெருவில் மக்கி புகாரீ அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள், சென்று பார்ப்போம் என்று அழைத்து சென்றார்கள். சென்றோம். பார்த்தோம். ஆனால் எனக்குள் ஒரு சிறு நெருடல், பார்த்த முகமாக இருக்கின்றதே... என்று மீண்டும் கூர்ந்து கவனித்ததில் அதிர்ச்சி.
முந்திய நாள்தான், நானும் என் மனைவியும் இவர்களின் கடைக்கு இனிப்பு பண்டங்கள் வாங்க சென்று இருந்தோம். இவர்களை அன்றுதான் முதல் முதலாக சந்தித்தேன். எங்களை கண்டதும் 25 வருடம் பழகிய மாதிரி விசாரித்தார்கள்.
நான் அவர்களிடம், (வியாபார தந்திரமோ என்று நினைத்து!!) இப்படி விசாரிக்கின்றீர்களே. என்னை தெரியுமா? என்றதும்,
அவர்கள், வாப்பா.... நான் என்ன மௌலா இஸ்லாமா...? இது காலிகட்.. அலாவுதீனுடைய லாத்தா மகள், நீ இவங்க கணவர். சவுதியில் இருக்கின்றாய்.. என்று ரேஷன் கார்டில் இருக்கும் அனைத்து விபரங்களையும் சொன்னதும் ஒரு அதிர்ச்சிதான்.
-கடையில் தனி ஆளாக இருந்து இந்த சாமானை எடுங்க, இது புதியது, இது நல்ல ஐட்டம் என்று பம்பரமாக ஒவ்வொரு சாமானையும் அடுக்கி காட்டியது - அவர்களின் சுறுசுறுப்பை.
- ஒவ்வொரு பண்டத்தையும் உடைத்து இதை சாப்பிடு பிள்ளை, இது நன்றாக இருக்கும், இதை சாப்பிடு என்று தைரியமாக முழு பொட்டலத்தையும் உடைத்து சாப்பிட கொடுத்தது கட்டியது - இவர்களின் வியாபார உத்தியை.
- பேச்சு பூராவும் இனிமையாகவும், ஜோக்காகவும் இருந்ததை காட்டியது -இவர்களின் நகைச்சுவை உணர்வை.
- கடையில் தனியாக பரபரப்பாக இருந்தவர், மொபைலை எடுத்து " சீக்கிரம் வாங்கப்பா.. கடையில் கஸ்டமர்கள் இருக்கின்றாகள்.. ஒருத்தனால் முடியவில்லை" என்று கூறிவிட்டு, மூச்சு வாங்க உட்கார்ந்து, வயசாகிவிட்டது. முன்பு போல ஆடி ஓடி வேலை செய்ய முடியவில்லை என்று கலைத்து சொன்னது - அவர்களுக்கு உடம்பில் பிரச்சனை உள்ளது என்பதை என்னால் அறிய முடிந்தது அவர்களின் மரணத்தை பார்த்த பின்பு.
முந்திய நாள் க்ளோஸ் ஆக உறவாடிய ஒருவரை ,இப்படி கண்டதில் என் மனம் க்ளோஸ் ஆகிவிட்டது.
மனைவிக்கு போன் போட்டு விபரம் சொன்னதில்.... என்னங்க சொல்லுறீங்க என்று அதிர்ச்சியில் பேச முடியாமல் மௌனமாக இருந்தது காட்டியது " - நிகழ்வின் பாதிப்பை.
வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தை அருள்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross