ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்ற பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீயின் தந்தை ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ என்ற மக்கி புகாரீ வியாழன் (ஜனவரி 17) அன்று காலமானார். அவர் மறைவுக்கு துபாய் காயல் நல மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
அருளாளன் அன்புடையோன் இறையேகன் திருப்பெயரால் ....
எங்களது பெருமதிப்பிற்குரிய மௌலவி ஹாபிழ் எஸ் எம் பி ஹுசைன் மக்கி மஹ்லரி (பொருளாளர், அபுதாபி காயல் நல மன்றம்) அவர்களின் அன்பிற்குறிய தகப்பனார் ஹாஜி கத்தீப் எம் எம் செய்யித் முஹம்மத் புஹாரி அவர்கள் ஜனவரி 17ம் தேதி அன்று வபாஃ த் ஆன செய்தி அறிந்து வருந்துகிறோம். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை அங்கீகரித்து, அவர்களது பிழைகளை மன்னித்து, அவர்களது கபூரை சுவனத்துப் பூங்காவாக அலங்கரித்து மேலான சுவனபதியில் நுழைந்திடச் செய்வானாக என பிரார்த்திக்கிறோம்.
மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் துபாய் வாழ் காயலர்கள் அனைவரின் சார்பில் எங்களின் இதயமார்ந்த ஸலாமினை உரித்தாக்கிகொள்வதோடு இப்பேரிழப்பை பொருந்திக்கொள்ளக்கூடிய மேலான பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுத்திடவும் துஆ செய்கிறோம். ஆமீன்.
இவண்,
துபாய் காயல் நல மன்றம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணை தலைவர், துபாய் காயல் நல மன்றம். |