பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்டது. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாள வழியுறுத்தும் நோக்கில் துவக்கப்பட்ட இவ்வியக்கம், பூவுலகு என்ற சுற்றுச்சூழலுக்கான இருமாத இதழை நடத்துகிறது.
இந்த பத்திரிகை விகடன் குழுமம் வழங்கும் சிறந்த சிறு பத்திரிக்கைகான விருதினை 2010 ஆம் ஆண்டு பெற்றுள்ளது.
பூவுலகு பத்திரிக்கையின் ஜனவரி/பிப்ரவரி 2013 இதழில் - காயல்பட்டினத்தில் அமைந்துள்ள DCW தொழிற்சாலையினால் ஏற்படும் மாசு குறித்த
விரிவான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்விதழ் சென்னை நந்தனத்தில் - ஜனவரி 11 முதல் ஜனவரி 23 வரை - நடைபெறும் 36வது புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள பூவுலக
நண்பர்களின் அரங்கில் (அரங்கு எண் 387), ஞாயிறு (ஜனவரி 20) அன்று வெளியிடப்பட்டது.
பூவுலக நண்பர்கள் அரங்கிற்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் ஞாயிறு (ஜனவரி 20) அன்று வருகை புரிந்திருந்தார்.
இந்த அமைப்பு குறித்த அறிமுகத்தினை காண இங்கு அழுத்தவும்
[Vikatan TV].
தகவல்: காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)
1. இப் பூவுலகில் DCW வினால் மாசு பிரச்சனையே தான்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[22 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25175
தலைப்பை பார்த்ததும் வித்தியாசமாயிருக்கேன்னு செய்தியை படித்தேன். விலாவாரியான தகவல்கள் இருந்தன. உண்மையில் இப் பூவுலகில் DCW வினால் மாபெரும் மாசு பிரச்சனைதான் என்பதில் சந்தேகமே இல்லை! -ராபியா மணாளன்.
2. Re:... posted bynizam (india)[22 January 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 25185
பூவலகின் நண்பர்கள் அமைப்புதான் கூடங்குளம் விவாரத்தை சுப்ரீம் கோர்ட்டு எடுத்து சென்று மத்திய அரசுக்கு அணுவுலை பாதுகாப்பு விசயத்தில் நெருக்கடி கொடுத்தார்கள். கீபாவும் இவர்களோடு இணைந்து செயல்பட்டால் DCW விசயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross