காயல்பட்டினத்தில், வரும் கல்வியாண்டில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் WISDOM PUBLIC SCHOOL வரும் கல்வியாண்டில் துவக்கப்படவுள்ளது. இதற்கான கட்டிடப் பணிகள், 12.12.2012 அன்று துவங்கியது. பணியாற்ற பெண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் எனவும், இம்மாதம் 26ஆம் தேதியன்று நேர்காணல் நடைபெறவுள்ளதாகவும் அப்பள்ளியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, WISDOM PUBLIC SCHOOL பள்ளியை நிர்வகிக்கும் விஷன் எஜுகேஷனல் ட்ரஸ்ட் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இன்ஷாஅல்லாஹ், வரும் 2013-2014 கல்வியாண்டில் நமதூரில் CBSC பாடத்திட்டத்தின் அடிப்படையில் துவக்கப்படவிருக்கும் WISDOM PUBLIC SCHOOL-இல் (PRE-KG முதல் V - STD வரை) ஆசிரியைகளாகப் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு.
கல்விப் பணியில் ஆர்வமும், அர்ப்பணிப்பும், ஆங்கில மொழித்திறமையும் உள்ள பெண் பட்டதாரிகள் தங்களது சுய விபரக்கோவையை (BIO -DATA) 25-01-2013 வெள்ளிக்கிழமைக்குள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பி வைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பத் தவறியவர்கள், தங்களது (BIO - DATA) சுய விபரக்கோவையுடன் நேரடியாகவும் கலந்துகொள்ளலாம். பணியிட விபரம் வருமாறு:-
New Page 1
பணி:
ஆசிரியை |
கல்வித்தகைமை
:
பட்டப்படிப்பு |
நேர்முகத்தேர்வு
நாள் :
26-01-2013 -
சனிக்கிழமை |
நேரம்:
காலை 09:30
மணி
முதல் |
இடம்:
விஷன்
எஜுகேஷனல்
ட்ரஸ்ட் ,
90/2,
அலியார்
தெரு,
ஸீ-கஸ்டம்ஸ்
ரோடு
அல்ஜாமிஉல்
அஜ்ஹர் ஜும்மா
மஸ்ஜித்
அருகில்
காயல்பட்டினம்
-
628 204. |
மின்னஞ்சல்:
wisdomkayal@gmail.com |
தொடர்பு
எண்:
98420 74511 , 99650 14744. |
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
Wisdom Public School சார்பாக,
ஹாஜி S.I.புகாரீ
|