ஜனவரி மாத இறுதியில் காயல்பட்டினம் வழியாக அமைந்துள்ள நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையினர், திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று, பிரதான வீதியில் விரைவாக புதிய சாலை அமைப்பதற்கு மனு அளித்தனர்.
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் சார்பாக ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மது, ஹாஜி எம்.எ.எஸ். ஜரூக் மற்றும் 1 வது வாடு உறுப்பினர் ஹாஜி லுக்மான் ஆகியோர் இன்று காலை திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று உதவி கோட்டப் பொறியாளர்
திரு திருவேங்கட ராமலிங்கம் அவர்களிடம் காயல்பட்டணம் பிரதான வீதியில் விரைவாக புதிய சாலை அமைக்கும்படியாக மனுவளித்தனர்.
மனுவை படித்துப்பார்த்த உதவி கோட்டப் பொறியாளர் அவர்கள் தற்போது பாளையங்கோட்டைப் பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், இம்மாத இறுதியில் உங்களுரின் சாலைப்பணிகள் தொடங்குமெனவும் உறுதியளித்தார்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஏ .ஆர். சேக் முஹம்மது,
செய்தி சேகரிப்பாளர், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை. |