காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, அப்பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்து, பள்ளி தலைமையாசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பாக 22.01.2013, செவ்வாய்கிழமை (இன்று) மாலை 04.30 மணியளவில், பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் “கலந்துரையாடல்” (பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்) எம்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
எனவே மேற்படி வகுப்பில் பயிலும் மாணவர்களது பெற்றோர் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். |