இன்று (ஜனவரி 20) அன்று நாடு முழுவதும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாண்டுகளாகவும், தமிழகத்தில் தொடர்ந்து ஒன்பதாண்டுகளாகவும் புதிதாக போலியோ நோயினால் எவரும் பாதிக்கப்படவில்லை.
நாட்டில் இருந்து முற்றிலும் போலியோ நோயினை ஒழிக்கும் முகமாக இன்றும், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்றும் போலயோ சொட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இன்ற நடந்த போலயோ முகாமில் - காயல்பட்டினத்தில் பல இடங்களில் சொட்டு மருந்து ஊற்றப்பட்டது.
இன்று நடந்த முகாமின் நகரின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு:
1. பலகோடி நன்றிகள்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[21 January 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25161
அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய அன்பு மகள் [ M.A.C. பாத்திமா ஷாஹின்] அவர்களையும், எனது அன்பு மச்சி மகன் A.S. ஹனீப் அப்துல்லாஹ் அவர்களையும் கண்டது மட்டற்ற மகிழ்ச்சி! ரசூலே கரீம் முகம்மது முஸ்தபா முகம்மது நபி [ஸல்] அவர்களின் அருமைந்த ஆசியாலும் மகளை பரிசாக தந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் அல்ஹம்ந்துல்லிலாஹ்.
கண்டு மகிழ துணைபுரிந்த அன்பு சகோதரர் ஹிஜாஸ் மைந்தன் அவர்களுக்கும், சகோதரர் S.K. சாலி அவர்களும்,இணையதள நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றி!
3. போலியோவை விரட்டும் தமிழக அரசு ,,,,,,,,,,,, posted byNIZAR (kayalpatnam)[21 January 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25170
தமிழகஅரசு மற்றும் தனியார் பொதுநல அமைப்புகள் இணைந்து ஊடகங்கள்,செய்திதாள்கள்,
தொலைக்காட்சி,மீடியா போன்றவைகளின் மூலம் இந்த போலியோ தடுப்பு ஊசி போடும் நாளையும் அதன் அவசியத்தையும் மக்களுக்கு பெரிய அளவில் பிரபகண்டா செய்து மக்களிடம் நல்ல விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம்.
தமிழக அரசு இந்த தடுப்பூசி போடுவதை மக்களிடம் வலியுறுத்தி போலியோ என்ற இந்த இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழித்து வருகிறது.முந்தய காலங்களில் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் இந்த நோயால் பாதிக்கபட்ட மாணவர்களை காணமுடியும்.மற்றவர்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் இந்த மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்,நன்றாக பிறந்து இடையில் ஏற்பட்ட இந்த போலியோவால் பாதிக்க பட்டதனால் மற்ற மாணவர்களை போல் ஓடி ஆடாமல் முடங்கி இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கும்.ஆனால் இப்பொழுது தமிழகஅரசால் முறையான மருத்துவத்தின் மூலம் ஒரு குழந்தை கூட பாதிக்காத வண்ணம் பல வருடங்களாக சாதித்து வருகிறது.
இதைபோல் மற்ற மாநிலங்களில் அறிமுகபடுத்தி உள்ள ஜெனரிக் மருந்தகங்களை தமிழக மருத்துவமனைகளில் அறிமுகபடுத்தி மக்களுக்கு சலுகை விலையில் உயர்ந்த மருந்துகளை வழங்க வேண்டும்.மக்களுக்கு இதை போன்ற மருத்துவ சேவைகளை அறிமுகபடுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழவேண்டும் என வாழ்த்துகிறேன்.
4. நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் வல்லோன் நமக்கு தந்தருள்வானாக...ஆமீன். posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[22 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25177
இக் கொடிய நோய் குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் நன்றாக சென்றடைந்துள்ளதை நான் நேரில் கண்டு வியந்தேன். நம்தூரில் சுமார் பதிமூன்று இடங்களில் சொட்டு மருந்து முகாம்ங்கள் நடத்தப்பட்டன. தெருவெங்கும் மழலைகளைச் சுமந்தும், நடத்தியும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நம் அரசு மேற்கொண்ட அபார முயற்சியால் இரண்டாண்டுகளாக நம் தமிழகத்தில் முற்ரிலுமாக போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதே!
இத் தளத்தின் வாசகர் சகோதரர் எம்.ஈ.முஹ்யத்தீன் அப்துல் காதர் அவர்களின் அருமை புதல்வி மற்றும் மருமகன் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தது குறித்து அவர்கள் வெளிப்படுத்திய நன்றியுணர்வுக்கு மிக்க நன்றி!
வல்ல அல்லாஹ் நம் மழலைச் செல்வங்களை இக் கொடிய இளம்பிள்ளை வாத நோயிலிருந்து பாதுகாத்தருள்வானாக...ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross