Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:00:37 AM
புதன் | 4 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1952, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:56
மறைவு17:57மறைவு20:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0405:3005:56
உச்சி
12:08
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4619:12
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9977
#KOTW9977
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 19, 2013
நாளை (ஜனவரி 20) நாடு முழுவதும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழ்நாடு போலியோ இல்லாத 9-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2772 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜனவரி 20 (ஞாயிறு) அன்று நாடு முழுவதும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு செய்தி குறிப்பு வருமாறு:

பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/ அரசு மருத்துவமனைகள் / சத்துணவு மையங்கள்/ பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்:

1. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

2. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 20-1-2013 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் 24-2-2013 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

4. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் (New Borns) முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

5. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.

6. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

7. இலங்கை வாடிந அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்து வாடிந குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:

பல்ஸ் போலியோ நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1013 நகரும் மையங்கள் (Transit Booth) நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 771 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சொட்டு மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள்:

20-01-2013 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல் மற்றும் அரிமா சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

தமிழ்நாடு போலியோ இல்லாத 9- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது:

போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ்நாடு 9-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். இத் தருணத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் முக்கியத்துவத்தை அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் விளம்பரம் செய்ய வேண்டும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்ஹம்துலில்லாஹ்.
posted by MUJEEBU (KAYALPATTINAM) [19 January 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25110

அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved