பிப்ரவரி மாதத்தில் K.M.T. மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்த அபுதாபி காயல் நல மன்றம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
அமீரக தலைநகர் அபுதாபி காயல் நல மன்றத்தின் பத்தாவது செயற்குழு கூட்டம் 11 - 01 - 2013 அன்று மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் DR. ஹமீது யாசர் அவர்களின் தலைமையில் மன்றத்தின் துணைத்தலைவர் ஜனாப் மக்பூல் அகமது அவர்களின் இல்லத்தில் வைத்து கூடியது. மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் M.S. அப்துல் ஹமீது அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.
மருத்துவ உதவி:
நமதூரின் கேன்சர் நோயாளி ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 40,000 [நாற்பதாயிரம்] வழங்க தீர்மானிக்கப்பட்டது.
K.M.T. மருத்துவமனையில் மருத்துவமுகாம்:
இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி மாதத்தில் நமது மன்றத்தின் மருத்துவக்குழு மூலம் காயல் மாநகரத்தில் மாபெரும் மருத்துவமுகாமை மன்றத்தின் சார்பாக K.M.T. நிர்வாகத்துடன் இணைந்து செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாட்டிற்கு கீழ் கண்ட துணைக் குழு அமைக்கப்பட்டது.
1. ஜனாப் மக்பூல் அகமது
2. DR. ஹமீது யாசர்
3. DR. செய்யிது அஹமது
4. ஜனாப் கனி முஹம்மது
5. ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை
பிரியாவிடை:
மன்றத்தின் துணைச்செயலாளர் ஆர்கிடெக்ட் ஹபீப் ரஹ்மான் அவர்கள் தனது சொந்த காரணத்திற்காக பணியை முடித்து தாயகம் திரும்புவதால் அவர்கள் மூலம் கிடைத்த நமது மன்றத்தின் இலட்சினை [LOGO] வடிவமைத்தும் பல ஆர்வமுள்ள ஈடுபாட்டுடன் கூடிய ஆலோசனைகளை நினைவுகூர்ந்தும் அவர்களின் எதிர்காலம் வல்ல ரஹ்மான் உதவியால் சிறப்பாக அமைந்து நலமுடன் நீடுழி வாழ வாழ்த்தி வழியனுப்பபட்டது.
இரங்கல் தீர்மானம்:
நாடறிந்த மார்க்க மேதையும், மார்க்கப் பணி மற்றும் சமுதாயப் பணிகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவரும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வருமான, கண்ணியத்திற்குரிய மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ அவர்களின் மறைவையொட்டி மன்றத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்தும் அவர்களின் இழப்பால் வாடும் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் அன்னாரின் மக்பிரத்திர்க்காக துஆ செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 08 – 02 - 2013 ஆம் தேதியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் M.A ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி அவர்கள் அறிவிக்க, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் நஹ்வி S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பட உதவி:
N.M. சுப்ஹான் பீர் முஹம்மது
தகவல்:
M.E. முகியதீன் அப்துல் காதிர்,
செய்தித் துறை பொறுப்பாளர், காயல் நல மன்றம், அபுதாபி.
|