காயல்பட்டினம் அரிமா சங்கத்திற்கு, இம்மாதம் 28ஆம் தேதியன்று - அரிமா மாவட்ட ஆளுநர் பி.ஜெ.எம்.யேசுபாலன் வருடாந்திர வருகையாக கலந்துகொள்ளவுள்ளார்.
அவரது இந்த வருகையையொட்டி, காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், சிறப்பு நிகழ்ச்சி அன்று மாலை 04.00 மணிக்கு, காயல்பட்டினம் துளிர் கேளரங்கில் நடைபெறவுள்ளது.
காயல்பட்டினம் அரிமா சங்கத்தால் நகரில் நிறைவேற்றப்பட்டுள்ள செயல்திட்டங்களை துவக்கமாக அரிமா மாவட்ட ஆளுநர் பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து, சங்கத்தின் சிறப்பு கலந்தாலோசனைக் கூட்டங்களும், அரங்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நகர அரிமா சங்க தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், செயலாளர்களான வி.டி.என்.அன்ஸாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, பொருளாளர் கே.அப்துல் ரஹ்மான் மற்றும் அங்கத்தினர் செய்து வருகின்றனர்.
தகவல்:
காயல்பட்டினம் அரிமா சங்கம் சார்பாக,
M.S.M.மீரா ஸாஹிப் |