காயல்பட்டினம் நகராட்சியில் - பொது நிதி, IUDM திட்ட நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திட்ட நிதி ஆகியவை மூலம் தற்போது 18 பணிகள், 161
லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியுள்ளன.
இப்பணிகள் குறித்த தொழில்நுட்ப விபரங்களை - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - இப்பணிகள் நடைபெறும் பகுதியை சார்ந்த உறுப்பினர்கள், ஜமாஅத்துகள்,
ஊர் நல கமிட்டிகள் மற்றும் பொது நல அமைப்புகள் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.
ஒப்பந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிகள்
நடைபெறுகிறதா என சரிபார்க்க கேட்டுக்கொண்டுள்ள நகர்மன்றத் தலைவர், இப்பணிகள் குறித்து சந்தேகங்கள்/புகார்கள் இருப்பின் - சம்மந்தப்பட்ட
வார்ட் உறுப்பினரையோ அல்லது நகர்மன்றத் தலைவர் (99658 26101), ஆணையர் (திரு அசோக் குமார் – 86758 81762), ஓவர்சியர் (திரு
செல்வமணி – 99527 90479) அல்லது தொழில்நுட்ப உதவியாளர் (திரு செந்தில் குமார் – 94865 08039) ஆகியோரை தொடர்பு கொள்ளும்படியும்
கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள 18 பணிகளில் 15 பணிகள் - சாலை பணிகளாகும். எஞ்சிய 3 பணிகள், மழைநீர் வடிகால் பணிகளாகும்.
(1) பொது நிதி பணிகள்
*** பிலால்பள்ளி தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 7 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** மங்களவினாயகர் கோவில் தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 4.5 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண
இங்கு அழுத்தவும்]
*** ஈக்கியப்பா தைக்கா தெரு முதல் கறுப்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) / கீழ நெய்னார் தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 13 லட்சம் [பணி குறித்த
முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** கடையக்குடி (கொம்புத்துறை) சாலை அமைத்தல் - ரூபாய் 9 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு
அழுத்தவும்]
*** நியூ காலனி சாலை அமைத்தல் - ரூபாய் 10 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
மொத்தம் - ரூபாய் 43 லட்சம்
(2) IUDM திட்ட பணிகள்
*** ஆசாத் தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 8 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** பாஸ் நகர் சாலை அமைத்தல் - ரூபாய் 8 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** மங்களவாடி மயான சாலை தடுப்பு சுவர் கட்டி மேம்பாடு செய்தல் - ரூபாய் 6.5 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** குளம் சாஹிப் தம்பி தோட்டம் சாலை அமைத்தல் - ரூபாய் 5.4 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** மருத்துவர் தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 4 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** நெய்னார் தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 12 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** வானியக்குடி எதிர் தெரு (அவன் செயல் காலனி) - ரூபாய் 3.10 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** பேருந்து நிலையம் முதல் மேல நெசவு தெரு வரை மழைநீர் வடிகால் அமைத்தல் - ரூபாய் 23.90 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** புதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை மழைநீர் வடிகால் அமைத்தல் - ரூபாய் 13.50 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** உட்சிமகாளியம்மன் கோவில் தெரு மழைநீர் வடிகால் அமைத்தல் - ரூபாய் 12.60 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
மொத்தம் - ரூபாய் 97 லட்சம்
(3) சட்டமன்ற உறுப்பினர் நிதி
*** அப்பாபள்ளி தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 9 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** ஓடக்கரை கிழக்கு தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 3 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
*** மஹ்லரா காலனி தெரு சாலை அமைத்தல் - ரூபாய் 9 லட்சம் [பணி குறித்த முழுவிபரம் காண இங்கு அழுத்தவும்]
மொத்தம் - ரூபாய் 21 லட்சம்
பணிகளின் மொத்த மதிப்பீடு - ரூபாய் 1 கோடியே, 61 லட்சம் (161 லட்சம்)
நகராட்சியின் பொது நிதியில் இருந்து நிறைவேற்றப்படும் ஈக்கியப்பா தைக்கா தெரு முதல் கறுப்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) வரையிலான சாலைப்பணியில் - ஈக்கியப்பா தைக்கா தெரு அருகில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிக்கு மன்ற அனுமதி நீக்கப்பட்டதால் - பணி விபரங்கள் மாறுபடும். |