தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், காயல்பட்டினம் நகராட்சி சார்பில் இன்று மாலை 04.00 மணிக்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தலைமை தாங்கி, பேரணியைத் துவக்கி வைத்தார்.
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் மாணவர்கள் பங்கேற்ற இந்த சைக்கிள் பேரணியில், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துனர் நிஸார், நகராட்சி தலைமை எழுத்தர் முருகேசன், அலுவலர்களான ராதா கிருஷ்ணன், பாஸ்கரன் மற்றும் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
நகரின் குறிப்பிட்ட வீதிகள் வழியாக சென்ற இப்பேரணியில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் அடங்கிய பிரசுரத்தை மாணவர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் வினியோகித்தனர். பிரசுர வாசகங்கள் வருமாறு:-
|