காயல்பட்டினத்தில் தற்போது நடைபெறும் சாலைப்பணிகள் திருப்தியாக இல்லை என பொதுமக்கள் கருதுவதாக அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் அசோக் குமாருக்கு மனு வழங்கப்பட்டுள்ளது. அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:
22/01/13
பெறுநர்
ஆணையாளர்,
காயல்பட்டணம் இரண்டாம் நிலை நகராட்சி,
காயல்பட்டணம்.
ஆணையாளர் அவர்களுக்கு,
பொருள்: சாலைகளை தரமுடன் அமைக்க கோரி
நமது நகராட்சி மூலம் சாலை பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு அதற்க்கான மதிப்பீடுகள் பெறப்பட்டு சாலைப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
நடைப்பெற்று வரும் சாலைப்பணிகள் அனுமதிக்கப்பட்ட தரத்தில் அமையப்படவில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்..
ஆகவே தாங்கள் இது குறித்து ஆய்வு செய்து ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் தரத்தின் அடிப்படையில் சாலைகள் தரமாக அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
நன்றி,
இவண்,
சமுதாய நலன் நாடும்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|