இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் - ஒரு முறைதான் பயணம் மேற்கொள்ள முடியும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிவுரையை தொடர்ந்து இந்திய ஹஜ் குழு, இந்த முடிவை எடுத்துள்ளது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்றிருந்த விதிமுறை தற்போது இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. இந்த முடிவினால் - இந்திய அரசாங்கத்தின் மானியம் ஒருவருக்கு ஒரு முறை தான் சென்றடையும். மேலும் - புதிதாக பலருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என இந்திய ஹஜ் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டிற்கான (1434/2013) ஹஜ் பயண விண்ணப்பங்கள் - பிப்ரவரி 6 முதல் மார்ச் 20 வரை மாநில ஹஜ் குழுக்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் அவசியம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் - ஹஜ் 1434/2013 க்கு விண்ணப்பம் செய்வோரின் பாஸ்போர்ட் மார்ச் 31, 2014 வரை செல்லத்தக்கதாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன் அடையாள அட்டை (விலாசத்துடன்) நகல், IFS Code கொண்ட ரத்து செய்யப்பட்ட காசோலை, 300 ரூபாய் செலுத்தியதற்கான SBI வங்கி ரசீது, மருத்துவ சான்றிதழ்கள் ஆகியவை இணைக்கப்படவேண்டும்.
[செய்தி திருத்தப்பட்டது @ 22:00/24.01.2012] |