காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலையினால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவது குறித்து டிசம்பர் 3, 2010 முதல் டிசம்பர் 6, 2010 வரை - 15 பாகங்களாக
காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டது.
Central Marine Fisheries Research Institute (CMFRI) மூலம் ஜனவரி 1987 இல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, நவம்பர் 1989 இல்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, பிப்ரவரி 1995 இல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை - ஆகியவை அப்போது இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
அந்த ஆய்வறிக்கைகள் - DCW தொழிற்சாலை கடலில் கழிவு நீரை கலப்பதையும், கழிவுகளில் மெர்குரி உட்பட பல ஆபத்தான உலோகங்கள்
உள்ளதையும், அதனால் மீன்கள் இறந்து மிதப்பதையும், மீன்களின் உடலினுல் மெர்குரி உள்ளதையும் ஊர்ஜிதம் செய்தன.
1995 ஆம் ஆண்டிற்கு பிந்தைய காலகட்டத்திலான ஆய்வறிக்கைகளை - காயல்பட்டணம்.காம் தற்போது பெற்றுள்ளது. இவ்வாய்வறிக்கைகள்
1999 - 2003 மற்றும் டிசம்பர் 2007 முதல் டிசம்பர் 2008 வரையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாகும்.
இந்த ஆய்வறிக்கைகள் முந்தைய ஆய்வறிக்கைகள் வெளியிட்ட தகவல்களை மீண்டும் ஊர்ஜிதம் செய்கின்றன.
Heavy metal concentration in sea water, sediment and bivalves off Tuticorin என்ற தலைப்பில் பி.எஸ்.ஆஷா,
பி.கே.கிருஷ்ண குமார் பி.கலதரன், டி.பிரேமா, கே.திவாகர், கே.கே.வல்சலா, ஜி.எஸ்.பட் ஆகியோர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்
மெர்குரி குறித்து ஆய்வுகள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் Iron, Manganese, Copper, Lead, Zinc போன்ற கன உலோகங்கள் -
கடலிலும், மண்ணிலும் (sediments), மீன்களிலும் (tissues) உள்ளது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகள் - தூத்துக்குடி அனல் மின் நிலைய கடலோரத்திலும், DCW தொழிற்சாலை அருகிலுள்ள கடலோரத்திலும் நடந்தது.
இந்த ஆய்வறிக்கையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்
DCW தொழிற்சாலை அருகில் பரிசோதிக்கப்பட்ட மணலிலும், மீனிலும் - கன உலோகங்கள் (Heavy Metals) அதிகம் உள்ளதாக இந்த ஆய்வறிக்கை
தெரிவித்தது. மேலும் DCW தொழிற்சாலை பகுதி உட்பட தூத்துக்குடி கரையோரம் முழுவதும் - கன உலோக மாசு (Heavy Metal Pollution),
பாதுகாப்பு அளவை விட, கூடுதலாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை - Journal of the Marine Biological Association of India என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையின் ஜனவரி - ஜூன் 2010
இதழில் வெளியாகி உள்ளது.
இது தவிர,
Environment degradation by chemical effluents along
the Kayalpatinam coast of Gulf of Mannar with special reference to mercury என்ற தலைப்பில் பி.எஸ்.ஆஷா,
எம்.செல்வராஜ் மற்றும் கே.திவாகர் ஆகியோர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் 1999 - 2002 காலகட்டத்திலும், 2007 - 2008 காலகட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வறிக்கையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்
இந்த இரு காலகட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் - மெர்குரி கடலில் கலக்கப்படுவதை ஊர்ஜிதம் செய்கின்றன. மேலும் 1999 - 2002 காலகட்டத்தில் உள்ள அளவை விட, 2007 - 2008 காலகட்டத்திலான கழிவுகளில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு 2007 ஆம் ஆண்டில் - DCW நிறுவனம், காஸ்டிக் சோடா உற்பத்தி செய்ய மெர்குரி பயன்படுத்துவதை நிறுத்தி - Membrane Cell முறைக்கு மாறிய காரணமாக இருக்கலாம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடலில் மெர்குரி மாசு நீங்காமல் சுமார் 42,000 ஆண்டுகள் இருக்கும் எனவும் இவ்வாய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கை - Journal of the Marine Biological Association of India என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையின் ஜனவரி - ஜூன் 2011
இதழில் வெளியாகி உள்ளது. |