இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நகர பொதுமக்கள் கலந்துகொண்டனர். |