இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 08.35 மணியளவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாஜி ஏ.எச்.நெய்னா ஸாஹிப், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), எம்.டி.ஜாஃபர் ஸாதிக், வாவு எஸ்.ஏ.ஆர்.அபுல்ஹஸன், எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், வாவு எஸ்.ஏ.ஆர்.இப்றாஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் கிராஅத் ஓதி, நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் கே.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில், பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தினார். அதனையடுத்து, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர், தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமையை விளக்கும் பாடலை, பள்ளி மாணவர் பி.முஹம்மத் ஷம்சுத்தீன் பாடினார்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் – விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறிதும் விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர் எஸ்.எம்.அஹ்மத் சுலைமானுக்கு, ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ பரிசு வழங்கினார். குறைந்த நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்த ஆசிரியர்கள் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர், எஸ்.ஏ.அய்யூப் அலீ ஆகியோருக்கு ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி ஏ.எச்.நெய்னா ஸாஹிப் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து, வட்டார அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர் பி.முஹம்மத் ஷம்சுத்தீனைப் பாராட்டி, ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) பரிசு வழங்கினார்.
பின்னர், பள்ளியின் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், அந்தந்த வகுப்பாசிரியர்கள் மூலம் பள்ளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவற்றை, ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, எம்.டி.ஜாஃபர் ஸாதிக், எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகியோர் வகுப்பாசிரியர்களிடம் வழங்கினர்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியர் எக்எஸ்.எல்பர்ட் வாஸ் நெறிப்படுத்தினார். ஆசிரியர் செய்யித் அப்துல் காதிர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், முன்னாள் - இந்நாள் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
N.ரஃபீக்,
ஆசிரியர்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 16:05 / 26.01.2013] |